தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 9 maart 2013

இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிட மாட்டோம்! ஆலோசனை மட்டும் சொல்வோம்!- சல்மான் குர்ஷித் !


அடுத்த நாட்டின் உள் விவகாரங்களில் இந்தியா தலையிடுவது இல்லை என ஆசிய பசிபிக் வர்த்தக சபை கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறினார்.
டெல்லியில் நேற்று வெள்ளிக்கிழமை நடந்த ஆசிய பசிபிக் வர்த்தக சபை கூட்டத்தில் கலந்து கொண்ட சல்மான் குர்ஷித் இதே கருத்தை மீண்டும் வலியுறுத்தினார்.
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு தொடர்பாக ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என மக்களவையில் நேற்று முன்தினம் நடந்த விவாதத்தில் தமிழக எம்.பி.க்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
இதற்கு பதிலளித்து பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், ‘‘எந்த நாட்டு விவகாரத்திலும் உலக போலீஸ்காரன் மாதிரியோ, பெரிய அண்ணன் பாணியிலோ இந்தியா செயல்படுவதில்லை’’ என கருத்து தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில் டெல்லியில் நேற்று நடந்த ஆசிய பசிபிக் வர்த்தக சபை கூட்டத்தில் கலந்து கொண்ட சல்மான் குர்ஷித் இதே கருத்தை மீண்டும் வலியுறுத்தினார்.
அவர் பேசுகையில்,
அடுத்தவர்களின் உள் விவகாரங்களில் நாங்கள் தலையிடுவதில்லை. எந்த விஷயத்திலும் நாங்களாக நுழைந்து புரோக்கராக செயல்படமாட்டோம்.
சரியான நேரத்தில் ஆலோசனை கேட்காதவர்களுக்கும், பாதுகாப்பான, நல்ல ஆலோசனையை இந்தியா வழங்கும். இந்தியா இயல்பாக செயல்பட விரும்புகிறது.
ஒரே நேரத்தில் இரு எதிரி நாடுகளுடன் நம்பிக்கையுடன் பேச இந்தியாவால் முடியும்.
மென்மையாக நடந்து கொள்வதாக இந்தியா மீது அடிக்கடி குற்றம் சாட்டப்படுவதுண்டு.
உலகநாடுகள் அனைத்தும் செழிப்புடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், யாருடனும் கடுமையாக நடந்து கொள்ள வேண்டியதில்லை.
அதனால் உலக பொலிஸ்காரன் கருத்துக்கு நாங்கள் ஆதரவு அளிப்பதில்லை.
சீனாவிடமிருந்து கூட சில விஷயங்களை கற்று, ஆரோக்கியமான போட்டியை சந்திக்கவே இந்தியா விரும்புகிறது.
இவ்வாறு, குர்ஷித் குழப்பமாக பேசினார்.
அவரின் பேச்சில், "இலங்கை' என்ற வார்த்தை இடம்பெறவில்லை என்றாலும், இப்போதைய நிலையில், இந்த நிலைப்பாடு தான், இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசின் நிலை என்பது மட்டும் மறைமுகமாக தெரிய வருவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Geen opmerkingen:

Een reactie posten