தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 9 maart 2013

2009ம் ஆண்டில் நல்லிணக்கம் தொடர்பான அமெரிக்க கோரிக்கைக்கு இலங்கை சாதகமான பதில்!- விக்கிலீக்ஸ்


இலங்கை அரசாங்கம், நல்லிணக்கம் தொடர்பான பணிகளை ஆரம்பிக்க வேண்டும் என்று அமெரிக்காவின் கொழும்புக்கான முன்னாள் தூதுவர் ரொபட் ஓ பிளெக் வலியுறுத்தியிருந்தார். 2009 ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்து இதனை வலியுறுத்தியதாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது. 
இலங்கை அரசாங்கம் முன்னர் உள்ள அரசாங்கங்களை விட சிறப்பாக செயற்பட்டு விடுதலைப்புலிகளிடம் இருந்து நாட்டை மீட்டுள்ளது.
இந்தநிலையில் இலங்கை அரசாங்கம், நல்லிணக்கம் தொடர்பான பணிகளை ஆரம்பிக்கவேண்டும் என்று அமெரிக்காவின் கொழும்புக்கான முன்னாள் தூதுவர் ரொபட் ஓ பிளெக் வலியுறுத்தியிருந்தார்.
2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்து இதனை வலியுறுத்தியதாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.
இதன்போது மனித உரிமைகள் மற்றும் இடம்பெயர்ந்தோரை மீண்டும் சொந்த இடங்களில் மீள் குடியமர்த்தல் மற்றும் தமிழர்களுக்கான அதிகாரம் பரவலாக்கத்துடனான அரசியல் தீர்வு என்பவற்றை இலங்கை முன்னெடுக்கவேண்டும் என்று பிளெக் வலியுறுத்தியுள்ளார்.
இதுவே பயங்கரவாதத்தை தோற்கடித்தன் நன்மையை நாட்டுக்கு பெற்றுக்கொடுக்கும் என்றும் பிளெக் சுட்டிக்காட்டியதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
இதன்போது பதிலளித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, மேற்கு நாடுகள் சில தம்மை பணிய வைக்க முயற்சிப்பதாக குற்றம் சுமத்தினார்.
எனினும் 13 பிளஸ் என்ற அடிப்படையில் மாகாணங்களுக்கு அதிகாரத்தை வழங்கி அமரிக்க செனட் சபையை போன்ற அமைப்பை ஏற்படுத்தப்போவதாகவும் அவர் உறுதியளித்ததாக விக்கிலீக்ஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.net/show-RUmryDTdNYju3.html

Geen opmerkingen:

Een reactie posten