தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 12 maart 2013

ஜப்பானில் மகிந்த ராஜபக்ச: இனப்படுகொலை தொடர்பில் கேள்வி எழுப்புங்கள்!- ஜப்பான் பிரதமரிடம் வி.உருத்திரகுமாரன் கோரிக்கை


தமிழர்கள் மீதான போர் குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பில், சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் கேள்வியெழுப்புங்கள் என,  நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், ஜப்பானிய பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடரில் வட கொரியா தொடர்பில், ஜப்பான் கொண்டுவரவுள்ள தீர்மானத்தினை சுட்டிக்காட்டி, சிறிலங்கா தொடர்பில் அனைத்துலக விசாரணைக்கான ஆதரவினைக் ஐ.நா மனித உரிமைச் சபையில் வலிறுயுத்துமாறும் அவர் கோரியுள்ளார்.
சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் கட்டளையின் கீழ் போரின் இறுதி ஐந்து மாதங்களில் மட்டும், 70 000 முதல் 1 00 000 தமிழர்கள் சிறிலங்கா அரச படைகளினால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதனை ஐ.நாவின் உள்ளக மீளாய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், தமிழ்ப் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வுகளிலும் சிறிலங்கா படையினர் ஈடுபட்டுள்ளனர் என்பதனையும் எடுத்துரைத்துள்ளார்.
மேலும், 1958ம் ஆண்டு முதல் தமிழர்கள் மீது இத்தகைய பாரிய படுகொலைகள் இடம்பெற்று வருகின்றன எனவும் 2009ம் ஆண்டின் போரின் போது, பாதுகாப்பு வலயங்கள் என சிறிலங்காவினால் அறிவிக்கப்பட்ட பகுதிகளில், திட்டமிட்ட முறையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளமை குறித்தும் அவர் எடுத்துரைத்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten