முல்லைத்தீவு- முள்ளியவளை கிராமத்தில் அரசியல் செல்வாக்குள்ளவர்களால் பழிவாங்கப்படும் தமிழ் மக்களை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் மற்றும் வினோநோதராதலிங்கம் ஆகியோர் பார்வையிட்டுள்ளனர்.
முள்ளியவளை கிராமத்தில் கடந்த 1972ம் ஆண்டு காடுகளை வெட்டி வாழ்ந்து வந்த மக்களை அங்கிருந்து துரத்திவிட்டு அந்தப் பகுதியில் முஸ்லிம் மக்களை குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் முஸ்லிம் அமைச்சர் ஒருவரின் தலைமையில் மேற்கொள்ளப்படுகின்றது.
மேலும், தமிழ் மக்கள் காடுகளை அழிக்கின்றார்கள் எனக்கூறி சுமார் 6 தமிழர்களை வனவள பாதுகாப்புத் துறையினர் கைது செய்து 20 ஆயிரம் சதுரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் புல்டோசரைக் கொண்டு கண்மூடித்தனமாக காடுகள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இதேபோல் வனவள பாதுகாப்பு துறையினர் தொடர்ச்சியாக இந்தப்பகுதிக்குச் சென்று மக்களை அச்சுறுத்தி வருகின்றனர். இதனால் வனவளத் துறையினரின் வாகனத்தை பார்த்தவுடன் தமிழர்கள் காடுகளுக்குள் சென்று ஒளிந்து கொள்ளும் பரிதாப நிலையில் உள்ளனர்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் நேரில் சென்று பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு நகரில் பிரத்தியேகமான இடமொன்றில் மக்களை சந்தித்து அவர்களுடைய குறை நிறைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டுள்ளனர்.
மேலும் இந்த விடயம் தொடர்பில் முஸ்லிம் மக்களுடனும் பாராளுமன்றத்திலும் கேள்வியெழுப்பவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர்.
Geen opmerkingen:
Een reactie posten