தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 20 maart 2013

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தளம்ப விட்டது அமெரிக்கா: த ஹிந்து பத்திரிகை !


இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா தளம்ப விட்டுள்ளதாக த ஹிந்து பத்திரிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த பிரேரணை, பல்வேறு திருத்தங்களின் பின்னர் நேற்று உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டது. இதில் ஆரம்பத்தில் இருந்த பல்வேறு சரத்துக்கள் திருத்தப்பட்டுள்ளன.
இதன்படி, இலங்கையில் தடையின்றி, வெளிநாட்டு கண்காணிப்பாளர்களும், நிபுணர்களும் பிரவேசிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்ற சரத்தை அமெரிக்கா முழுமையாக நீக்கியுள்ளது.
அத்துடன், இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, இலங்கை அரசாங்கம் தமத மனித உரிமை மீறல் விடயங்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணை நடத்த வேண்டும் என்ற புதிய சரத்து இணைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான திருத்தங்கள் மூலம், அமெரிக்காவின் பிரேரணை வலுவற்றதாக மாறிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilwin.net/show-RUmryDRUNZnu2.html

Geen opmerkingen:

Een reactie posten