தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 20 maart 2013

மகிந்த ராஜபக்சவைக் கண்டித்து மும்பையிலும் தமிழர்கள் போராட்டம்! வைகோ பங்கேற்பு


இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவுக்கு எதிராக இந்தியாவில் தீவிரமடைந்து வரும் போராட்டங்கள் தற்போது மும்பை நகரிலும் பரவியுள்ளது
மஹிந்த ராஜபக்சவைக் கண்டித்து மும்பை நகரில் வாழும் தமிழர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடத்த வலியுறுத்தியுள்ள அவர்கள், ராஜபக்சவைத் தண்டிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஐ.நா மனித உரிமை அவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியாவே கொண்டுவர வேண்டும் என்றும் மும்பை வாழ் தமிழர்கள் வலியுறுத்தினர்.
இனப்படுகொலை தொடர்பான படங்களையும் பதாகைகளையும் ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு அளிக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.
2ம் இணைப்பு
ஈழத்தமிழர் இனப் படுகொலை: இந்திய அரசு கூட்டுக் குற்றவாளி: வைகோ
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு இந்தியாவும் பொறுப்பு ஏற்க வேண்டும். ஈழத்தமிழர்கள் கொத்துக் கொத்தாக மடிந்து போனதற்கு இந்தியாவும் கூட்டுக்குற்றவாளிதான் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை குறித்து சுதந்திரமான பன்னாட்டு விசாரணை கோரியும், விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் இன்று (புதன்கிழமை) காலை 11.30 மணிக்குக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மும்பை தமிழர்கள் பாதுகாப்புக் குழுவின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மும்பை மாநகராட்சி கவுன்சிலர் தமிழ்ச்செல்வன் தலைமை ஏற்றார். கொளுத்தும் வெயில் என்றும் பாராமல் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆர்பாட்டத்தில் பங்கு ஏற்றனர்.
கூட்டத்தில் பேசிய வைகோ,
ஈழத்தமிழர் படுகொலை குறித்து, சுதந்திரமான பன்னாட்டு விசாரணை வேண்டும்; இலங்கை அதிபர் ராஜபக்சவை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும்; தனி ஈழம் உருவாக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்’ என்றார்.
இலங்கையில் நடைபெற்றது போர்க்குற்றம் அல்ல; அது ஒரு இனப்படுகொலை. இந்தப் படுகொலைக்கு இலங்கைக்கு உதவிய இந்திய அரசும் கூட்டுக்குற்றவாளிதான் என்று கூறினார்.


http://news.lankasri.com/show-RUmryDRUNZnt5.html

Geen opmerkingen:

Een reactie posten