தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 18 maart 2013

கணவன் முன்பு சுவிஸ் நாட்டு பெண் கற்பழிப்பு!!


மத்திய பிரதேசம் அருகே சுற்றுலா வந்த சுவிஸ் நாட்டு பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டார். இது தொடர்பாக 8 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து சுவிஸ் நாட்டு தூதரக அதிகாரிகள் விவரத்தை கேட்டறிந்துள்ளனர். சுவிஸ் நாட்டில் இருந்து சைக்கிள் மூலம் ஒரு ஜோடியினர் இந்தியா வந்துள்ளனர். மத்திய பிரதேசம் டாட்டியா மாவட்டத்தில் வரும்போது 8 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து புதர் பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கு கணவன் கண் எதிரே கற்பழித்துள்ளனர். இதில் மயக்கமுற்ற நிலையில் அந்த பெண் குவாலியர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்ப்பட்டார். 

இது குறித்து மாவட்ட எஸ்.பி., சோலங்கி கூறுகையில்; இங்குள்ள ராமர் கோயில் அருகே தங்கி இருந்த இந்த ஜோடியினர் ஆக்ரா செல்ல திட்டமிட்டிருந்தனர். இந்நேரத்தில் 8 பேர் கொண்ட கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது. அந்த பெண்ணை கற்பழித்து கணவரையும் தாக்கியுள்ளனர். தொடர்புடையவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten