இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு மௌனம் சாதிப்பது ஏன் என்றும் அவர் அந்த கடிதத்தின் மூலம் மன்மோகன் சிங்கிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பில் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் மேலும் கூறியுள்ளதாவது,
‘இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில், நடத்தப்பட்டதாகக் கூறப்படும் படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து, சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று, தமிழகம் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் வலியுறுத்தி வருகின்றனர். எனினும், அதனை இலங்கை அரசு தொடர்ந்து உதாசீனப்படுத்தி வருகிறது.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்திற்கு இந்திய மத்திய அரசு ஆதரவளிக்க வேண்டும். அத்துடன், அமெரிக்கத் தீர்மானத்தை மேலும் வலுப்படுத்த தேவையான மாற்றங்களையும் சுதந்திரமான முறையில் முன்னெடுக்க வேண்டும்.
கடந்தாண்டு ஜெனீவாவில் அமெரிக்காவினால் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய பிறகும், இலங்கையில் தமிழர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இந்தத் தருணத்தில், இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் படுகொலைகள் தொடர்பாக இந்தியா எந்த ஒரு நிலைப்பாட்டையும் எடுக்காதது வருத்தமளிக்கிறது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்திற்கு ஆதரவளிப்பது தொடர்பாகவும், மத்திய அரசு மௌனியாக இருப்பது அதிருப்தியளிப்பதாக குறிப்பிட்டுள்ள ஜெயலலிதா, அமெரிக்காவின் தீர்மானத்தை தைரியமாக ஆதரிக்க வேண்டும்’ என ஜெயலலிதா தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
:

Geen opmerkingen:
Een reactie posten