தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 10 maart 2013

ஐ.நாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம்!- தணிக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபடலாம்: பேராசிரியர் சகாதேவன்


இலங்கையில் ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்தியா ஒருவித தயக்கத்துடனேயே செயற்பட்டுவந்துள்ளதாக தெற்காசிய விவகாரங்களுக்கான ஆய்வாளரான பேராசிரியர் சகாதேவன் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அழுத்தங்களின் பேரில்தான் இந்தியா ஆதரித்து. அதுமட்டுமின்றி, அந்த தீர்மானத்தில் இருந்த வார்த்தைகளை தணிக்கும் வகையிலும் இந்தியா செயற்பட்டது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
பேராசிரியர் சகாதேவன் மேலும் தெரிவிக்கையில்,
இந்திராகாந்தி போல ஒரு அடிப்படையான ஒரு பலமான தலைமைத்துவம் இந்தியாவில் இல்லாத காரணத்தினால், அங்கே அதிகாரவர்க்கத்தின் தகவல்களின் அடிப்படையில்  பயத்துடனே முடிவுகளை அது எடுக்கின்றது.
இலங்கையில் நடந்த சம்பவங்கள் என்னவென்று இந்தியாவுக்கு நன்றாகத் தெரியும். ஒரு தார்மீக அடிப்படையில் என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இந்தியாவுக்கு யாரும் சொல்லிக்கொடுக்கவும் தேவையில்லை.
அமெரிக்கா கொண்டு வரும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தால், இந்தியாவுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது. அதனை இந்தியத் தரப்பு புரிந்துகொள்ள வேண்டும்.
உண்மையில் இலங்கையில் இந்தியா எந்தவிதமான போரையும் நடத்தவில்லை. நீங்கள் நடத்துங்கள் என்று இலங்கைக்கு கூறிவிட்டு வாயை மூடிக்கொண்டு இருந்தது என்பது உலகுக்கே தெரிந்த விடயம்.
ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் தானே போரை நடத்தியதாக ஏற்கனவே கூறிவிட்டதால், இந்தியா மீது இந்தப் போர் குறித்த பழி வந்துவிடும் என்று அது பயப்படத் தேவையில்லை.
இதேவேளை, இந்தத் தடவைகூட இலங்கைக்கு எதிராக வரக்கூடிய தீர்மானத்தை தணிக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபடலாம் என்றும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten