டெசோ சார்பில் நடந்து வரும் பொது வேலை நிறுத்தம் காரணமாக மாநிலம் முழுவதும் தி.மு.க.வினர் ரயில், சாலை மறியல் செய்து கைது செய்யப்பட்டனர்.
இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்க வலியுறுத்தி டெசோ சார்பில் தமிழகத்தில் இன்று பொது வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது.
சென்னையில் வழக்கம் போல் அரசு பேருந்துகள், ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகி்ன்றன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.
அண்ணா சிலை அருகே சாலை மறியல் செய்த எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் உள்பட தி.மு.க.வினர் 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை தண்டையார்பேட்டையில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆவடி நகரமன்ற தலைவர் நாசர் தலைமையில் மறியல் செய்த தி.மு.க.வினர் 400 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மறியல் செய்ய முயன்ற சட்டக் கல்லூரிகள் கைது செய்யப்பட்டனர்.
தாம்பரத்தில் கடைகளை அடைக்க சொன்ன தி.மு.க.வினர் 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவொற்றியூரில் சாலை மறியல் செய்த தி.மு.க.வினர்இ பி்ன்னர் ராஜபக்ச உருவபொம்மை எரி்க்க முயன்றதால் 900 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் முன்பு மாநகர் மாவட்ட செயலாளர் தளபதி தலைமையில் மறியல் செய்த தி.மு.க.வினர் 150 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரியில் ஹவுரா சென்ற ரயிலை மறித்த முன்னாள் முதல்வர் ஜானகிராமன் உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுவையில் ராஜபக்சே உருவ பொம்மையை எரிக்க முயன்ற தி.மு.க.வினர் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. ஆட்டோக்களும் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
புள்ளம்பாடியில் லால்குடி எம்.எல்.ஏ சௌந்திரபாண்டியன் தலைமையில் மறியல் செய்த 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் அருகே லாலாஜாபாத்தில் ரயில் மறியல் செய்த தி.மு.க.வினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரத்தில் பந்துக்கு ஆதரவு தெரிவித்து 4 ஆயிரம் கடைகள் மூடப்பட்டுள்ளன.
நாகையில் ரயில் மறியல் செய்த தி.மு.க. எம்.பி விஜயன் உள்பட 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவையில் சிறு, குறு தொழிற்சாலைகள் பெரும்பாலும் மூடப்பட்டுள்ளன.
தி.மு.க.வினர் டெசோ அமைப்பின் சார்பாக விடுத்த வேண்டுகோளை திருச்சி மக்கள் நிராகரித்தனர் என்றுதான் சொல்ல வேண்டும். தி.மு.க.வினரே பெரிய அளவில் ஆவலுடன் பங்கேற்கவில்லை.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் மாவட்டச் செயலாளர் கே.என்.நேரு தலைமையில் மறியல் செய்த 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் நகராட்சி அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் செய்த முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் முன்னாள் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் சாலை மறியல் செய்த 100 பேரும், காரைக்குடியில் முன்னாள் அமைச்சர் தென்னவன் தலைமையில் 22 பேரும் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல்லில் மணிக்கூண்டு அருகே மறியல் செய்த முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமிஇமாநில மகளிர் அணித் தலைவி நூர்ஜகான் பேகம் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரையில் புறநகர் மாவட்ட செயலாளர் மூர்த்தி, முன்னாள் மேயர் குழந்தை வேலு உள்ளிட்டவர்கள் தனித்தனியாக மறியலில் ஈடுபட்டு கைதானார்கள்.
திருவண்ணாமலையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் மறியல் செய்த 300 பேரும்இ கீழ்பெண்ணாத்தூரில் முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டி தலைமையில் 150 பேரும் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகரி்ல் முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தலைமையில் மறியல் செய்த 50 பேரும், காரியாபட்டியில் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் மறியல் செய்த 100 பேரும் கைது செய்யப்பட்டனர்.
Geen opmerkingen:
Een reactie posten