தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 15 maart 2013

இலங்கைக்கு எதிரான போராட்டம் எதிரொலி!- கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை


இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும், இலங்கை அரசைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.  இந்நிலையில், தமிழகத்தில் உள்ள கல்லூரிகளுக்கு தமிழக அரசு காலவரையற்ற விடுமுறை அறிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பல இடங்களில் உண்ணாவிரதம் இருந்து வரும் மாணவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டு வரும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் மாணவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.
இந்த நிலையில், அனைத்து கல்லூரிகளுக்கும் காலவரையற்ற விடுமுறை அளிக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten