தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 15 maart 2013

தமிழகமெங்கும் இன்றும் தொடர்ந்தது மாணவர்கள் போராட்டம்!


தமிழகமெங்கும் இன்றும் தொடர்ந்தது மாணவர்கள் போராட்டம்! 
14 03 2013

இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், இலங்கை அதிபர் ராஜபக்சவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடுஎங்கும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று14 03 2013 தமிழகம் முழுவதும் வெடித்து பரவி வருகிறது.


சென்னை சட்ட பல்கலைக்கழக மாணவர்கள் 10 பேர் தொடங்கிய சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் இன்று 4-வது நாளாக நீடிக்கிறது. இதில் 2 மாணவர்களின் உடல் நிலை மிகவும் மோசமானது. போராட்ட மாணவர்கள் உடலில் நீர்சத்து குறைந்து வருவதால் அவர்களுக்கு பதிலாக மற்ற மாணவர்களும் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

சென்னை ஐகோர்ட்டு வாசலில் வக்கீல்கள் கேசவன், ரவி, சஞ்சீவி லட்சுமி ஆகிய 3 பேரும் இரவு உண்ணாவிரதம் தொடங்கினர். கோர்ட்டு வாசலில் உண்ணாவிரதம் இருக்கக்கூடாது என நீதிபதிகள் கூறினர். ஆனாலும் 3 வக்கீல்களும் இன்று தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

உண்ணாவிரதம் இருந்த சட்டக்கல்லூரி மாணவர்களில் மெர்லின், பிரகாஷ், கோகுல், மணி ஆசிய 4 பேரின் உடல் நிலை மோசமானதால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். புரவைவாக்கத்தில் உள்ள சட்டக்கல்லூரி விடுதியில் 60 மாணவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரி மாணவர்கள் 18 பேர் நேற்று முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று மேலும் 4 மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். மொத்தம் 22 பேர் அங்கு உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்கள். ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்று உடன் படிக்கும் மற்ற மாணவ, மாணவிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பிராட்வே பஸ் நிலையம் அருகில் சாலையில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் நடத்திய போராட்டத்தால் சிறிது நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சட்டக்கல்லூரி விடுதி மாணவர்கள் கனகராஜ், செந்தில், மாதேசா, யுவராஜ், அகிலன் உள்பட 11 பேர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக சில மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராஜபக்ச கொடும்பாவியை எரித்ததோடு, மத்திய அரசையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். சென்னை மாநில கல்லூரி மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து விட்டு இன்று போராட்டத்தில் குதித்தனர். துரைப்பாக்கம் ஜெயின் கல்லூரி மாணவர்கள் 16 பேர் இன்று உண்ணாவிரதம் தொடங்கினார்கள்.

திருக்கழுக்குன்றத்தை அடுத்த கீரப்பாக்கத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவ, மாணவிகள் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் செங்கல்பட்டு சாலையில் உள்ள மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை அகதி ஈழநேரு, இலங்கை மீது போர்குற்ற விசாரணை நடத்தக்கோரி கடந்த 12-ந்தேதி முதல் உண்ணாவிரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று அவரது போராட்டம் 3-வது நாளாக நீடித்தது. இவை தவிர சென்னையில் மேலும் சில கல்லூரி மாணவர்கள் அடுத்தடுத்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலூரில்

கடலூரில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் மார்க்கெட் காலனி பட்டதாரி இளைஞர்கள் குப்புராஜ் (21), பிரபாகரன் (21) சிவில் இன்ஜினியர் நாகராஜ் (23), ஐடிஐ மாணவர் ராஜேந்திரன் (22), அனிமேஷன் இன்ஜினியர் நெய்வேலி மாறன் (26) ஆகியோர் இன்று காலை 6 மணிக்கு கடலூர் பாரதி சாலையில் பஸ் நிறுத்தம் பின்புறம் தனியார் இடத்தில் தொடர் உண்ணாநிலை அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அருகில் ஈழத்தமிழர் படுகொலை காட்சிகளையும் ராஜபக்ச அரசின் போர்க்குற்றங்களை சித்தரித்தும் கோரிக்கைகளை வலியுறுத்தியும் பேனர்கள் வைத்திருந்தனர்.

கோரிக்கை அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வினியோகம் செய்தனர். கடலூர் புதுநகர் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையில் போலீசார் அங்கு வந்தனர். அவர்களை கலைந்து போகுமாறு எச்சரித்தனர். அதற்கு வாலிபர்கள், நாங்கள் தனியார் இடத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறோம். தனியார் இடத்தில் உண்ணாவிரதம் இருப்பதற்கு அனுமதி பெற தேவை இல்லை. காந்திய வழியில் அறப்போராட்டம் நடத்துவதற்கு எங்களை அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். அதை ஏற்காத போலீசார், மாணவர்களை வலுக்கட்டாயமாக தரதரவென இழுத்து சென்று வேனில் ஏற்றினர். வழக்கறிஞர்கள் செந்தில், அருள் மற்றும் கிருபாகரன், மக்கள் கலை இலக்கிய கழகம் பாலு, நாம் தமிழர் கட்சி கடல் தீபன் ஆகியோர் போலீசாரிடம் நியாயம் கேட்டனர். கடல் தீபனை கைது செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு வர டிஎஸ்பி உத்தரவிட்டார். அவரையும் போலீசார் வாகனத்தில் ஏற்றி சென்றனர். அங்கிருந்த பேனர்களை அப்புறப்படுத்தினர்.

திருச்சியில்

இலங்கையில் தனி ஈழம் அமைக்க கோரியும், லட்சக்கணக்கான இலங்கை தமிழர்களை கொன்ற ராஜபட்சவை குற்றவாளி கூண்டில் ஏற்றிடக் கோரியும் திருச்சியில் இன்று காலை பெரியார் அரசு கல்லூரி மற்றும் சட்ட கல்லூரி மாணவரகள் 300 பேர் கல்லூரிகலில் இருந்து ஊர்வலமாகச் சென்று தலைமை அஞ்சலகம் அலுவலகத்தில் உள்ள நுழைவாயிகளை அடைத்து கோஷம் எழுப்பினர்.பின் மீண்டும் பாரத ஸ்டேட் பாங் சர்கில் அலுவலகத்திற்கு சென்று கதவை அடைத்தன. அங்கிருந்து ரயில் நிலையத்திற்கு சென்று ரயிகளை மறித்து இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என கோசங்கள் எழுப்பினர்.

நெல்லையில்

நெல்லையில் இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக இன்றும் மாணவர்கள் போராட்டம் தொலடர்கிறது. நெல்லை பாளையங்கோட்டையில் 13 மாணவர்கள் இன்று நான்காவது நாளாக மாணவர்கள் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதனால் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சேலத்தில்

தமிழ் ஈழம் அமைக்க கோரியும், லட்சக்கணக்கான ஈழ தமிழர்களை கொன்ற ராஜபட்சவை குற்றவாளி கூண்டில் ஏற்ற கோரியும், சேலம் சட்டக் கல்லூரி மாணவர்கள் 20 பேர் கல்லூரி வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கியுள்ளனர் மதுரையில் இலங்கை இனப்படுகொலை பற்றி சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தி மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் 5 பேர் தல்லாகுளம் தலைமை தபால் அலுவலக கட்டிடத்தில் ஏறி குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதனால் அப்பகுதி பரபரப்பு நிலவி வருகிறது.

சிதம்பரத்தில்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் 4-ம் நாள் நாளாக இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மயக்கமடைந்த மாணவர்கள் 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இருவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.போர்க்குற்றம் புரிந்த இலங்கை அதிபர் ராஜபட்சேவை கண்டித்தும், ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் ராஜபட்சே மீது சர்வதேச விசாரணை நடத்த தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கலை, அறிவியல், விவசாயம் மற்றும் பொறியியல் மாணவர்கள் கடந்த திங்கள்கிழமை வகுப்புகளை புறக்கணித்து பல்கலைக்கழக வளாகத்தில் பூமா கோயில் முன்பு தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். தொடர்ந்து 4-ம் நாளாக இன்று வியாழக்கிழமை மாணவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாணவர்கள் தொடர் போராட்டம் காரணமாக பல்கலைக்கழக நிர்வாகம் காலவரையற்ற விடுமுறையை செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இருப்பினர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் தோடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உண்ணாவிரதப் போராட்டத்தில் மாணவர்கள் பிரபு, சுப்பிரமணியசிவா, தங்கராஜ், மணிகண்டன், வசந்தராஜா, ராஜன், ராகுல், சிவராஜ், ஜெகதீசன், விஜயகுமார் உள்ளிட்ட 10 பேர் மயக்கடைந்து ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் பிரபு, சுப்பிரமணியசிவா ஆகிய இருவரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

போர்க்குற்றம் புரிந்த இலங்கை அதிபர் ராஜபட்ச மீது சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என கோரி ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி சிதம்பரம் அருகே உள்ள கீழமூங்கிலடி ஸ்ரீராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் வியாழக்கிழமை வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் சிதம்பரம்-கடலூர் செல்லும் புறவழிச்சாலையில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சிதம்பரம் ஏஎஸ்பி எம்.துரை தலைமையிலான போலீஸார் அங்கு சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்த போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 45 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோவையில்

கோவையில் இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக பல்வேறு கல்லூரி மாணவர்கள் இன்று சா‌லை மறியல், ரயில் மறியல் போராட்டங்களை நடத்தி கைதாகினர். சாலைமறியல் செய்ததாக 17பேரும், சில கல்லூரிகளில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டமும், சில இடங்களில் ரயில்மறியலும் செய்த மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். கோவை ம.தி.மு.க. அலுவலகத்தில் நான்காவது நாளாக உண்ணாவிதரம் இருந்து வரும் சட்ட மாணவர்களை , தமிழருவி மணியன் சந்தித்தார். இம்மாணவர்களில்ஒருவர் உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போராட்டம் இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது.

தூத்துக்குடியில்

தூத்துக்குடியில் வக்கீல்கள் உண்ணாவிரதம் இருந்தனர். இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா நிராகரிக்க வேண்டும் எனவும், அதற்கு பதிலாக இலங்கை தமிழர் பிரச்னையில் இந்தியா தீர்மானம் கொண்டுவர வேண்டும் எனவும், அதிபர் ராஜபக்ஷேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க கோரியும் வக்கீ்ல்கள் சங்கத்தினர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

நன்றி தமிழ் இணையங்கள்

Geen opmerkingen:

Een reactie posten