தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 14 maart 2013

புலிகளுடனான போரின் போது இந்தியாவுடன் இலங்கை ஏற்படுத்திய உடன்பாடு அம்பலம்!


விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது, இலங்கை அரசுடன் ஏற்படுத்தியிருந்த உடன்பாடு ஒன்றை இந்தியா அம்பலப்படுத்தியுள்ளது.
பூநகரியை, மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா தலைமையிலான இராணுவத்தின் 58வது படைப்பிரிவு கைப்பற்றுவதற்கு சில வாரங்கள் முன்னதாக, இந்த இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.
2008ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் இலங்கையுடன் ஏற்படுத்தப்பட்ட இந்த இணக்கப்பாடு, தமிழ்நாட்டுக்கும் இலங்கையின் வடமேற்குப் பகுதிக்கும் இடையிலான விடுதலைப் புலிகளின் வழங்கல் பாதையை துண்டிக்கும் நோக்கத்தைக் கொண்டே ஏற்படுத்தப்பட்டது.
இதனடிப்படையில், இலங்கை அரசாங்கத்தினால் குறிப்பிடப்பட்ட பிரதேசங்களுக்குள், தமது நாட்டு மீன்பிடிப் படகுகளை அனுமதிக்கப் போவதில்லை என்று இந்திய அரசாங்கம் இலங்கைக்கு உறுதியளித்துள்ளது.
இந்தத் தகவலை இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி இந்திய நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்தியாவுடன்  இலங்கை ஏற்படுத்திக் கொண்ட இந்த இணக்கப்பாட்டின் மூலம், விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் வழங்கல் நடவடிக்கையை  இலங்கைக் கடற்படை துண்டிப்பது இலகுவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

http://news.lankasri.com/show-RUmryDSYNYgp2.html

Indian Defence Minsiter revealed the agreement signed between India: SriLanka during the final stage of war against LTTE
[ Thursday, 14 March 2013, 03:32.51 PM GMT +05:30 ]
Indian Defence Minister A.K.Antony revealed the agreement signed between India and SriLanka during the final stage of war against LTTE.
This was signed on October 2008, few weeks before capturing Poonagari by the 58th brigade lead by Maj.Gen. Shavendra Silva.
The aim of this agreement was to cut out the logistic system of LTTE between Tamil Nadu and North West part of SriLanka.
India promised to SriLanka that it will prevent their fishermen enters in to that territory.
This helped Lankan Navy to destroy the supply of Sea Tigers.

http://eng.lankasri.com/view.php?22eOld0acL5YOd4e2UMC302cAmB2ddeZBmU203eWAA2e4yY5naca3lO442

Geen opmerkingen:

Een reactie posten