தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 14 maart 2013

Amnesty Internatio​nal comment on final draft of US resolution!!


இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தின் இறுதி வரைவு தொடர்பில் சர்வதேச மன்னிப்புச்சபை கருத்து
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தற்போதைய அமர்வில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மான வரைவு உறுப்பு நாடுகளுக்கு சுற்றுக்கு விடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த வரைவுத் தீர்மானம் இலங்கை அரசு நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையும், தேசிய நடவடிக்கைத் திட்டமும், சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டதாக எழுந்த பாரிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கவில்லை என்று கூறுகிறது.
மேலும் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாக வரும் செய்திகள், மக்கள் காணாமல் போகடிக்கப்படுவது, மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் போன்றோர் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாவது, நீதித்துறையின் சுதந்திரத்துக்கு எழும் அச்சுறுத்தல்கள் ஆகியவை குறித்து இந்தத் தீர்மானம் கவலை வெளியிடுகிறது.
மேலும், இலங்கை அரசு, அரசியல் அதிகாரப் பரவலைச் செய்யத் தவறியது உட்பட வெளிப்படையாகக் கொடுத்த உறுதிமொழிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது என்றும் அந்த தீர்மான வரைவு கூறுகிறது.
மேலும் ஐ.நா மன்ற மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை இலங்கையில் நல்லிணக்கத்தையும், பொறுப்புகூறலையும் மேம்படுத்த ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவி தருவது குறித்து வெளியிட்ட அறிக்கையை வரவேற்கும் இந்த தீர்மான வரைவு, சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தையும், மனித நேய சட்டத்தையும் மீறிய செயல்கள் குறித்து ஒரு நம்பகமான, சுயாதீனமான, சர்வதேச விசாரணைய கோரி ஆணையர் விடுத்த அழைப்பையும் கவனத்தில் எடுத்துக் கொள்கிறது.
இந்த ஆணையரின் அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் பரிந்துரைகளை இலங்கை அரசு அமுல்படுத்த வேண்டும் என்றும் அந்த தீர்மான வரைவு கோருகிறது.
மேலும் இலங்கை அரசு, ஐ.நா மன்ற நீதிபதிகள் சுதந்திரத்துக்கான சிறப்புத்தூதர் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் போன்ற குழுக்கள் இலங்கைக்கு வந்து செல்ல தங்குதடையற்ற அனுமதி தருமாறும் இந்த வரைவுத்தீர்மானம் கோருகிறது.
இத்தீர்மான வரைவு பின்னர் வாக்கெடுப்புக்கு எடுத்துகொள்ளப்படக் கூடும்.
'ஒட்டுமொத்தத்தில் இது ஒரு பலமான தீர்மானம்.
கடந்த வருடத்தில் இருந்து இது வாதங்களை மேலும் முன்னெடுத்துச் செல்கிறது. என்று அம்னஸ்டி இன்டர்நாஷனல் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

http://news.lankasri.com/show-RUmryDSYNYgo2.html

Amnesty Internatio​nal comment on final draft of US resolution
[ Thursday, 14 March 2013, 07:43.53 AM GMT +05:30 ]
Final draft of the US resolution submitted against SriLanka at the UN Human Rights Council has been handed over to membership nations.
The draft alleged that the  Lankan government  has fail to response to the recommendations of LLRC commission appointed by the Lankan government , national action plane and the violations of international law.
This draft expressed concern over news reports on human rights violations in SriLanka, continues  disappearances of civilians , human rights activists ,journalists in the country and also specially about threats cause to the independent judiciary system of the country.
Lankan government previously promised to implement political power devolution in the country. However at the end they refuse to do so. This draft welcomes the report released by the UNHRC commissioner Navi Pillay recently on providing technical assistance to SriLanka to establish reconciliation in the country.
It also pays special attention on international investigation on human rights violations reported in SriLanka. Draft finally urges Lankan government grant permission for UN judges and human rights activists to visit the country.
This final draft would be submitted for voting later on. This was a strong resolution, Amnesty International spokesman said.

http://eng.lankasri.com/view.php?22eOld0acB5YOd4e2UMC302cAmB2ddeZBmU203eWAA2e4oY5naca3lO442

Geen opmerkingen:

Een reactie posten