இலங்கையில் தமது மாநாட்டை நடத்துவது குறித்து, பொதுநலவாய நாடுகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று, த கார்டியன் ஊடகம் தெரிவித்துள்ளது.
அந்த பத்திரிகை இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொதுநலவாய நாடுகள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதில் இருந்த அதன் சிறப்பான செயற்பாடுகளுக்கான நன்மதிப்பை பெற்றுள்ளது.
குறிப்பாக தென்னாப்பிரிக்காவில் இடம்பெற்ற இனப்பிரச்சினை, நைஜீரியாவில் இடம்பெற்ற நீதிக் கொலைகள், சிம்பாப்வேயின் சர்வாதிகாரம் போன்ற விடயங்களில் பொதுநலவாய நாடுகள் அமைப்பு சிறப்பாக செயற்பட்டது.
இந்த நிலையில் தற்போது கொழும்பில் அதன் மாநாட்டை நடத்த உத்தேசித்துள்ளமை, அதன் நற்பெயரை களங்கப்படுத்துவதாக அமையும் என்று த கார்டியன் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிலையில் அது தொடர்பில் பொது நலவாய நாடுகள் அமைப்பு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
http://www.tamilwin.net/show-RUmryDTcNYjr5.html
Geen opmerkingen:
Een reactie posten