தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 8 maart 2013

இலங்கையில் மின் கட்டணம், பஸ் கட்டணம் ஆகியன அதிகரிப்பு


மின்சார கட்டணமும் விரைவில் அதிகரிக்க விருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. மின் அலகு ஒன்றுக்கான ஆகக்குறைந்த கட்டணமான 3 ரூபா, 9 ரூபாவாக அதிகரிக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை மின்சார சபையின் அதிகாரிகளுக்கும் மின்சக்தி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் அலரிமாளிகையில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே மின்சார கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
பஸ் கட்டணம் அதிகரிப்பு
அடுத்த வாரம் முதல் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
நூற்றுக்கு ஆறு முதல் ஏழு வீதம் வரை இந்த பஸ் கட்டண அதிகரிப்பு இடம்பெறலாம் என்றும் கெமுனு விஜேரத்ன மேலும் கூறினார்.
2ம் இணைப்பு
 பஸ் கட்டண உயர்வு குறித்து இதுவரையில் தீர்மானம் ஒன்று எடுக்கப்படவில்லை என தனியார் போக்குவரத்து அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பிரதிநிதிகள் இன்று (08) தனியார் பஸ் சங்கங்கள் பலவற்றுடன் பேச்சுவார்த்தை நடாத்தியதாக அவர் குறிப்பிட்டார்.
பேச்சுவார்த்தை குறித்த அறிக்கை தனக்கு கிடைக்கப்பெற்றதும் இறுதி முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார்.
எனினும் பஸ் கட்டண அதிகரிப்புக்கு தனியார் போக்குவரத்து அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Geen opmerkingen:

Een reactie posten