தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 15 maart 2013

Lankan issue: T.Rajendar stage protest against Indian central government!!


இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் வலியுறுத்தினார். இலங்கை அரசை கண்டித்து லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் தலைமையில் வள்ளுவர் கோட்டம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 
‘‘பாலசந்திரனை கொன்னீங்களடா பாவி, உங்க பாவங்களை மன்னிக்காதுடா ஆவி!,
ராஜபக்ச நீ செய்த பாவமெல்லாம் நிக்குதய்யா லைனா, உன்ன தண்டிக்காம விடாது ஐநா!
இந்திய அரசே இலங்கைக்கு வால் பிடிக்காதே!, நம்மளவன் நடிக்கிறான், அதான் சிங்களவன் அடிக்கிறான்!
தமிழினமே தூங்காதே, ஈழத்தமிழர் இதயம் தாங்காதே!
இரக்கமில்லா காங்கிரஸ் நெஞ்சம், ஈழத் தமிழனுக்கு செஞ்சதடா வஞ்சம்!
என்பது உட்பட பல்வேறு கோஷங்களை டி.ராஜேந்தர் முழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:
ஈழத்தமிழர்களை கொன்று இலங்கையை ராஜபக்ச சுடுகாடு ஆக்கினார். அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி செம்மொழி மாநாடு நடத்தினார்.
இன்று ஆட்சியில் இல்லை, அதனால் டெசோ மாநாடு நடத்திக் கொண்டிருக்கிறார். ஆட்சியில் இருக்கும் போது அவர் ஒன்றும் செய்யவில்லை. எனவேதான் அனைவரும் அவரை இன்று சாடுகிறார்கள்.
ஈழப்போர் நடந்து கொண்டிருந்த போது மத்தியில் உங்கள் கட்சிக்கு அதிகாரம் தேவை என்று காங்கிரசுக்கு நமஸ்காரம் செய்து கொண்டிருந்தீர்கள். இன்று கண்கெட்ட பின், சூரிய நமஸ்காரம் செய்கிறீர்கள்.
காங்கிரஸை எதிர்த்து தி.மு.க.வை அண்ணா தொடங்கினார். அந்த எதிர்ப்பு இப்போது இல்லாமல் போனதால் தி.மு.க இன்று முடங்கி விட்டது. மக்களிடம் ஆதரவு இல்லாததால், டெசோ பந்த் பிசுபிசுத்து போனது.
இலங்கையில் இப்போதுள்ள ஈழத்தமிழர்களையாவது காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு கருணாநிதி உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும். இவ்வாறு டி.ராஜேந்தர் பேசினார்.


Lankan issue: T.Rajendar stage protest against Indian central government
[ Friday, 15 March 2013, 02:33.42 PM GMT +05:30 ]
Leader of the Lakshiya DMK party T.Rajendar stage protest against Indian central government on demanding to support US resolution submitted against SriLanka on Geneva.
This protest staged near the Valluwarkottam. Addressing the gathering T.Rajendar went on to say, Lankan president Rajapaksa killed thousands of Tamils in the country. Now it’s a grave yard. On this Time Karunanidhi hoisted Semmozi conference in Tamil Nadu.
At present he organizes TESO conference. During his ruling period he fails to save lives of Tamils in Lanka. During the time of Eelam war he stand beside the Congress to prove the power of his party in the central government. Anna stared DMK against the Congress. People never respect and support DMK policies.
Indian central government should step forward to save lives of Tamils currently residing in SriLanka. Center should support the US resolution submitted against SriLanka, Rajendar stressed out.

http://eng.lankasri.com/view.php?22eOld0acB5YOd4e2UMC302cAmB2ddeZBmU203eWAA2e4SY5naca3lOe42

Geen opmerkingen:

Een reactie posten