தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 15 maart 2013

போலிப் பிரசாரங்களுக்கு துணை போகாத நாடுகளுக்கு நன்றி!- ஜெனீவாவில் மஹிந்த சமரசிங்க


போலிப் பிரசாரங்களுக்கு துணை போதாக நாடுகளுக்கு நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதியின் மனித உரிமை விவகாரத்திற்கான விசேட பிரதிநிதி மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
உலகின் சில நாடுகள் இலங்கைக்கு எதிராக போலியான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன. எனினும், இந்த பிரச்சாரங்களுக்கு ஏமாறாமல் சில நாடுகள் நாட்டின் அபிவிருத்தியை பாராட்டுகின்றன.
கடந்த மனித உரிமைப் பேரவை மாநாட்டில் முன்வைக்கப்பட்ட 204 பரிந்துரைகளில் முதலில் 110 பரிந்துரைகளையும், பின்னர் 3 பரிந்துரைகளையும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 91 பரிந்துரைகளை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளில் 12ஐ அமுல்படுத்த வேண்டுமென்பதனை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளதாக மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாம் இணைப்பு
இலங்கையின் மனித உரிமை பற்றிய ஆய்வறிக்கை ஜெனிவா மாநாட்டில் தாக்கல்
இலங்கையின் மனித உரிமைகள் பற்றிய ஆய்வு அறிக்கையை ஜெனிவா மாநாட்டில் இலங்கை பிரதிநிதி மகிந்த சமரசிங்க தாக்கல் செய்தார்.
அப்போது எல்எல்ஆர்சி அளித்த 91 பரிந்துரைகளை அரசால் செயல்படுத்த முடியவில்லை எனவும் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் இறுதிப் போருக்கு பின்னர் 3 லட்சம் அப்பாவித் தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர் விளக்கம்
இலங்கை இராணுவத் தாக்குதலால் தனது குடும்பமே பாதிக்கப்பட்டு விட்டதாக காசிபிள்ளை என்பவர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். மேலும் இலங்கையில் தொடர்ந்து மனித உரிமை மீறல்கள் நடைபெற்று வருவதாக குறிப்பிட்ட அவர், ஐ.நா மனித உரிமை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இவர் ஆம்னெஸ்டி சார்பில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தார்.
இலங்கை விளக்கம்
இலங்கை உச்சநீதிமன்ற நீதிபதி நீக்கப்பட்டது சரியான நடவடிக்கையே எனவும், விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட இஸ்லாமியர்கள், சிங்களர்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் போரின் போது காணாமல் போனவர்களை கண்டறியும் பணி விரைவில் முடிவடையும் எனவும் இலங்கை அரசு விளக்கம் தெரிவித்துள்ளது.
ஆய்வறிக்கை குறித்து பல்வேறு நாடுகள் குறித்து புகாருக்கு இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. 30 ஆண்டு காலமாக இலங்கை அரசு தீவிரவாதத்தை எதிர்த்து வருவதாகவும் சமரசிங்கே குறிப்பிட்டுள்ளார்.
மேலும் புகார்கள் குறித்து நீதி விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் தனி நாடு அமைக்க தீவிரவாத அமைப்பு போராடியது எனவும், சிறுபான்மை மக்களை விடுதலை புலிகள் கொன்றதாகவும் குறிப்பிட்ட அவர் புத்த இஸ்லாமிய வழிபாட்டு தலங்கள் விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டது எனவும் தெரிவித்தார். எனவே தான் விடுதலைப் புலிகளை ஒழிக்க இலங்கை அரசு முடிவு செய்தது எனவும் அவர் தெரிவித்தார்.
http://news.lankasri.com/show-RUmryDSZNYgw6.html
Minister Mahinda Samarasing​he thanked the member states of the UNHRC for their positive engagement
[ Friday, 15 March 2013, 02:40.23 PM GMT +05:30 ]
Addressing the UNHRC Minister Mahinda Samarasinghe thanked the member states of the UNHRC for their positive engagement during the Universal Periodic Review while highlighting the concerns of the country regarding misinformation.
Minister Samarasinghe stated that the country was thankful to member states that acknowledged its progress last November in terms of the stride Sri Lanka had made following the war.
Apart from a series of recommendations made by the Council the Minister stated that Sri Lanka had made a number of voluntary commitments as well.
He reminded the council that Sri Lanka had accepted 110 of the recommendations made by the Council while an additional 3 recommendations enjoyed the support of Sri Lanka whereas 91 other recommendations were not accepted by the country.
Furthermore, he added that Sri Lanka had accepted 12 recommendation pertaining to the implementation of the recommendations set out by the Lessons Learnt and Reconciliation Commission (LLRC).
Sri Lanka also assured the member states that it will soon publish a report on the progress made by the country during the first year of the National Human Rights Action plan.

Geen opmerkingen:

Een reactie posten