சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் லியாங் கோங்லீ இலங்கை வந்திருந்த போது, தென்னாசிய பகுதிகளில் இராணுவ தொடர்புகளை வலுப்படுத்த சீனா முக்கியத்துவம் வழங்குவதாக தெரிவித்திருந்தார்.
எனினும் இது பிராந்திய பாதுகாப்பினை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவே தவிர ஏனைய நாடுகளை அச்சுறுத்துவதற்காக இல்லை என்றும், அவர் தெரிவித்துள்ளர்.
இந்த நிலையிலேயே த ஹிந்து பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இந்து சமுத்திரம் மற்றும் ஆபிரிக்க பிராந்தியங்களில் சீனா தமது இராணுவ பலத்தை அதிகரித்து வருவதாக, வாசிங்டனிலும், புதுடில்லியிலும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்தே, சீன பாதுகாப்பு அமைச்சு இந்த கருத்தை வெளியிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten