தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 13 maart 2013

"அம்மா யூ கேன்" - ஜெனிவாவில் ஜெ. - ஜெயலலிதா மௌனமாக இருப்பது ஏனோ?


இலங்கையின் போர்க் குற்றங்களுக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்ற குரல்கள் உலகமெங்கும் எதிரொலிக்கின்றன.
கடந்த வாரம் ஜெனிவாவில் தமிழ் அமைப்புகள் ஒன்று திரண்டு நடத்திய போராட்டத்துக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஈழ ஆதரவாளர் டாக்டர் தாயப்பன் சென்றுள்ளார்.
ஊர்வலத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் முத்துக்குமார், முருகதாசன், பாலச்சந்திரன் படங்களோடு சனல் 4 தொலைக்காட்சிக்கு ஆதரவாக பனர்களும் எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.
'அம்மா யூ கேன்’ (உங்களால்தான் முடியும் அம்மா)  என்ற ஆங்கில எழுத்துக்களுடன் ஜெயலலிதாவின் படம் தாங்கிய பனர்களும் இடம் பெற்றதுதான் ஆச்சர்யம்.
இதுபற்றி நம்மிடம் பேசிய மருத்துவர் தாயப்பன்,
''இலங்கையில் நடந்தது உள்நாட்டுப் பிரச்சினை இல்லை. இது, சர்வதேசப் பிரச்சினை என்பதை அங்கு நாங்கள் சந்தித்த அனைவரும் ஒப்புக்கொண்டனர். அதனால்தான் நீதி கேட்டு இத்தனை ஆயிரம் பேர் வந்தனர்.
அமெரிக்கா தன் பொருளாதார நலன் சார்ந்து இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்திருந்தாலும் உலக நாடுகள் இதை ஆதரித்தாக வேண்டும்.
இது, இந்தி​யாவுக்கும் ஒரு நெருக்கடியைக் ஏற்படுத்தி இருக்கிறது.
ஈழ விவகாரத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கைகளை ஈழத் தமிழர்கள் முக்கியமான ஆதரவாக நம்பி இருக்​கின்றனர்.
'இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்’ என்று, சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தது முதல், அவருடைய ஈழ ஆதரவுக் குரல் பலமாகமே எதிரொலிக்கிறது.
அதனால்தான் ஜெயலலிதாவுக்கு நன்றி சொல்லி ஜெனிவா போராட்டத்தில் பேனர்கள் எடுத்து வந்தனர்.
இலங்கை விவகாரத்தில் வேறு யாரையும் விட தமிழகத்தின் நிலையைத்தான் எல்லோரும் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள்'' என்றார் தாயப்பன்.
ஜெயலலிதா மௌனமாக இருப்பது ஏனோ?
ஜூனியர் விகடன்

http://news.lankasri.com/show-RUmryDSXNYhu7.html



"Amma You Can"- Geneva protesters inform Jayalaitha
[ Wednesday, 13 March 2013, 08:11.27 AM GMT +05:30 ]
Tamil’s all around the world stress Indian government to support US resolution submitted against SriLanka at the UN Human Rights Council in Geneva.
Tamil Nadu Eelam activist Dr. Thayappan took part in the protest campaign organised by the Tamil organizations in Geneva last week.
On the procession people hold the photographs of LTTE leader Prabhakaran, Murugadasan, Balachandran and banners supporting the activities of Channel-4 activities.
Doctor surprised over viewing banners with photographs of Jayalalitha and the wording which says “Amma You Can”. These banners were raised by the Tamil’s present in the protest campaign.
Speaking this regard Dr.Thayappan went on to say,
Thousands of people gathered at the protest strongly believe this was not the internal issue of SriLanka, this was international issue.
US have submitted this resolution against SriLanka to full fill its economic benefits. However international community should support this resolution.
This issue has created problems to India.
Lankan Tamils strongly believes favorable activities by Tamil Nadu CM Jayalaitha.
Previous CM submitted report of “Impose economic sanction on Sri Lanka” in the Rajya Sabaha. During the Geneva protest people thanked CM for her support.
Doctor further said majority of people had paid their special attention on Tamil Nadu stance on Lankan issue.
Finally doctor questioned in such situation why do Jayalalitha maintain silence this regard?



http://eng.lankasri.com/view.php?22eOld0acT5YOd4e2UMC302cAmB3ddeZBmU202eWAA2e4UY5naca2lOU42


Geen opmerkingen:

Een reactie posten