தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 8 maart 2013

பிரிட்டன் பிரஜை கொலை தொடர்பில் திருப்தி அடைய முடியாது!- பா.உ சைமன் டென் சேக்


பிரிட்டன் பிரஜை படுகொலைச் சம்பவம் தொடர்பில் அரசாங்கம் நடத்தி வரும் விசாரணைகள் திருப்தி அடையும் வகையில் இல்லை என அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் சைமன் டென் சேக் தெரிவித்துள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டு கிறிஸ்மஸ் பண்டிகையன்று தங்காலை பிரதேச சுற்றுலா விடுதியொன்றில் சாக்கீ குர்ஹாம் என்ற பிரிட்டன் பிரஜை படுகொலை செய்ய்பட்டார்.
இவர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கொலை தொடர்பிலான விசாரணைகள் எவ்வாறு நடைபெறுகின்றது என்பதனை கண்காணிக்கும் நோக்கில் குர்ஹாமின் சகோதரர் நசீருடன், நாடாளுமன்ற உறுப்பினர் சைமன் டென் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
சம்பவம் குறித்த விசாரணைகள் திருப்தி அடையும் வகையில் இல்லை என அனைத்து நாடாளுமன்ற ஒன்றியத்தில் சைமன் டென் முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து நாடாளுமன்ற ஒன்றியத்தின் இலங்கைக் கிளை அறிவித்தள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தங்காலை பிரதேச சபைத் தலைவர் சம்பத் சந்திர புஸ்வ விதான பத்திரன உள்ளிட்ட எட்டு பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten