தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 6 maart 2013

அமெரிக்க விசேட குழு திடீரென்று யாழ்.விஜயம்! அமெரிக்க பிரேரணை தொடர்பில் ஆராய்வு: குழப்பத்தில் அரசாங்கம் !!


ஐ.நா வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் பிரேரணையென்று கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் அமெரிக்க விசேட குழுவென்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளது.
இக்குழுவினர் நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளதோடு, யாழ்ப்பாணத்தின நிலைமைகள, இலங்கைக்கு எதிரான பிரேரணைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள், சிவில் அமைப்பினர் சிலருடனும் கலந்துரையாடியுள்ளது.
அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான அதிகாரி ஜேக்கப் தலைமையிலான குழுவினரே இவ்வாறு யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.
இதேவேளை இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா வலுவற்றதாக்குவதற்கு தற்போது மேற்கொண்டு வரும் அதீத செயற்பாடுகள் தொடர்பில் அமெரிக்க அதிகாரிகளிடம் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை ஜெனீவாவில் இலங்கைக்கு பாரிய தலையிடியென்று ஏற்பட்டுள்ள நிலையில்  இக்குழுவினர், யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தது அரசாங்கத்திற்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
திடீரென்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த அமெரிக்க குழுவினரின் விஜயம் முக்கியமானதாக இருக்கும் என மக்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகின்றது.

http://www.tamilwin.net/show-RUmryDTaNYks4.html

Geen opmerkingen:

Een reactie posten