தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 14 maart 2013

உண்ணாவிரதம் இருந்த மாணவன் விஷம் குடித்து தற்கொலை முயற்சி!


 [ விகடன் ]
இலங்கைக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து வந்த மாணவரை கல்லூரி பேராசிரியர் திட்டியதால் மனம் உடைந்த அந்த மாணவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மாணவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 3 பேரும் சென்னை லயோலா கல்லூரி மாணவர் கார்ல்மார்க்ஸ் தலைமையில் கல்லூரி வளாகத்தில் 4வது நாளாக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் மத்திய அரசு பிரதிநிதி தங்களிடம் நேரில் பேச்சுவார்த்தை நடத்த வர வேண்டும் என்பது மாணவர்களின் முக்கிய கோரிக்கை.
இதனிடையே, பட்ஜெட் விளக்கப்  பொதுக் கூட்டத்தி்ற்காக வரும் சனிக்கிழமை காலை காரைக்குடி வருகிறார் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம். அந்த நேரத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடந்து விடக் கூடாது என்பதற்காக மாணவர்களை இரவோடு இரவாக கைது செய்வதற்கான முயற்சியிலும் இருக்கிறது போலீஸ்.
இதனிடையே, உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து உடன் அமர்ந்த மண்ணியல்துறை முதலாமாண்டு மாணவர் காளிராஜை நேற்று விலங்கியல் துறைத் தலைவர், போராட்டத்தில் கலந்து கொண்டதை கண்டித்து திட்டினாராம். இதனால் மனஉளைச்சல் அடைந்த காளிராஜ் தனது சொந்த ஊரான பரமக்குடிக்கு சென்று நேற்றிவு விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் காளிராஜ்.
கல்லூரி மாணவர் விஷம் குடித்த விவகாரம் போராட்டக் களத்தில் இருக்கும் மாணவர்கள் மத்தியில் கடும் கொந்தளி்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://news.lankasri.com/show-RUmryDSYNYgr3.html

Geen opmerkingen:

Een reactie posten