இலங்கை இணயத்தளங்கள் மீதான சைபர் தாக்குதல் குறித்து தெளிவுபடுத்த விசேட கருத்தரங்குகள் நாத்தப்பட உள்ளன.
இலங்கை தகவல் தொழில்நுட்ப முகவர் நிறுவகத்தின் கீழ் இயங்கி வரும் கணனி அவசரப் பிரிவு இந்த கருத்தரங்குகளை ஒழுங்கு செய்துள்ளது.
முதல் கட்டமாக அரசாங்க இணைய தளங்களை நடாத்துவோருக்கு விசேட தெளிவுபடுத்தல்கள் வழங்கப்பட உள்ளன.
சைபர் தாக்குதல்களிலிருந்து எவ்வாறு இணைய தளங்களை பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து விளக்கமளிக்கப்பட உள்ளது.
தனியார் நிறுவனங்களுக்கும் இந்த கருத்தரங்கு நடாத்தப்பட உள்ளது.
இணைய தளங்களை எவ்வாறு பராமரித்தல், நுழைவுச் சொல் பயன்பாடு, சைபர் தாக்குதலுக்கு இலக்கானால் எடுக்கப்பட வேண்டிய உடனடி நடவடிக்கை போன்றன குறித்து இந்த கருத்தரங்கில் விளக்கமளிக்கப்பட உள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten