தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 7 maart 2013

அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட கூடாது! சுதந்திரமாக நாமும் வாழ வேண்டும் என்றே விரும்புகின்றோம்!- குகராசா


ஜனநாக முறைக்குட்பட்ட இந்த நாட்டிலே தமிழர்களாகிய நாமும் பெரும்பான்மையினர் அனுபவிக்கின்ற உரிமைகளைப் பெற்று நாமும் மனிதர்களாக வாழவேண்டும், எம்மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படக் கூடாது சுதந்திரமாக நாமும் வாழ வேண்டும் என்றே விரும்புகின்றோம் என்று கரைச்சிப் பிரதேசசபைத் தலைவர் நா. வை.குகராசா தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் பன்முகப்படுத்தப்பட்ட 2012ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட நிதியிலிருந்து கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலர் பிரதேசத்திற்குட்பட்ட கிராமிய அமைப்புக்களுக்கு பொருட்கள் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் அவர் தனது உரையில்,
எமது பகுதிகள் கடந்தகால யுத்தங்களால் முழுமையாக அழிவடைந்து சீரழிந்த நிலையில் காணப்படுகின்றது. எமது மக்கள் இப்போது வாழ்வதற்கு வீடற்ற நிலையிலும், உரிய வாழ்வாதாரங்கள் அற்ற நிலையிலும் சொல்லொணாத் துயரத்தில் மூழ்கி அவலப்படுகிறார்கள்.
இந்த அவல நிலைபற்றிய உண்மைகளை நாம் வெளியில் கதைத்தால் சிலருக்குப்பிடிப்பதில்லை. நாம் ஒன்றும் பொய் கூறவில்லை. எமது மக்கள் பலர் இப்போதும் பல வகைகளிலும் அவல வாழ்க்கை தான் வாழ்கின்றார்கள்.
எமது மக்களின் அவல நிலைக்கு ஒரு முடிவு இன்றித் தொடர்கின்றது. யுத்தம் முடிந்து விட்;டது, மக்கள் நிம்மதியாக வாழ்கின்றார்கள் என்று வெளியில் கூறப்படுகின்ற போதிலும் கண்ணீரோடுதான் மக்கள் வாழ்கி;ன்றார்கள்.
காணாமல் போன உறவுகளைத் தேடி அவர்களுக்கு ஒரு முடிவு இன்றிய நிலையில் கண்ணீரோடு கலங்கி அலைகின்றார்கள். இவர்களுக்கு ஒரு பொறுப்பான முடிவு இன்றுவரை இல்லை. இவர்கள் தமது உறவுகளை கண்டு பிடித்துத் தருமாறு ஒன்று கூடிக் கேட்பதற்குக்கூட பல்வேறுபட்ட இடையூறுகளும் அச்சுறுத்தல்களும் தடைகளும்தான் காணப்படுகின்றன.
இந்த நிலை மாற வேண்டும் எமது மக்களும் நிம்மதியாக ஒரு சரியான முடிவு வேண்டும். அதனைத்தான் ஜனநாயக முறைக்குட்பட்ட இந்த நாட்டிலே தமிழ்த்Nதுசியக்கூட்டமைப்பினராகிய நாமும் என்றைக்கும் வலியுறுத்தி வருகின்றோம்.
எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் உங்களுக்காக, உண்மைக்காக குரல் கொடுப்பதனால் பல்வேறுபட்ட சோதனைகளைச் சந்தித்து வருகின்றார். ஆனாலும் அவர் தளர்ந்து விடவில்லை. ஏனெனில் அவர் செல்லும் பாதை சரியானது. இப்போதும் அவர் உங்களுக்காக உள்நாட்டில்; மட்டுமல்லாது ஜெனீவா வரை சென்று தம்மால் ஆனவற்றைச் செய்து வருகின்றார்கள்.
அவருடைய பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிந்து கிராமிய அமைப்புகளுக்கு வழங்குவதையிட்டு மகிழ்;ச்சி அடைகின்றோம். எமது பணிகள் என்றைக்கும் மக்களுக்கானவை, நீதியானது, நியாயமானது அது என்றைக்கும் தொடரும் என்றார்.
மேற்படி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து பொருட்கள் கையளிக்கும் நிகழ்வானது கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை 11.00 மணிக்கு ஆரம்பாமாகி நடைபெற்றது.
இந்நிகழ்வில் கரைச்சிப்பிரதேச சபை உபதலைவர் வ.நகுலேஸ்வரன், கரைச்சிப் பிரதேசசபை உறுப்பினர்களான வி.சுவிஸ்கரன், சி.சுப்பையா, வே.செல்லத்துரை, த.சேதுபதி, ஆகியோருடன் கரைச்சிப் பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ். அமலதாஸ், மற்றும் திட்டமிடல் பகுதி உத்தியோகஸ்தர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சிக் கிளையின் செயலாளர் சு.பசுபதிப்பிள்ளை ஆகியோரும் கலந்து கொண்டு,
சாந்தபுரம் விளையாட்டுக் கழகம்,
விவேகானந்த நகர் கிருஸ்ணபாரதி விளையாட்டுக் கழகம்,
கனகாம்பிகைக்குளம் தூய தமிழ் விளையாட்டுக்கழகம்,
கிருஸ்ணபுரம் விபுலானந்த விளையாட்டுக்கழகம்,
பாரதிபுரம் புதிய பாரதி விளையாட்டுக் கழகம்,
ஸ்கந்தபுரம் ஸ்கந்தா விளையாட்டுக் கழகம்,
கிளி. பன்னங்கண்டி இ.த.க.வித்தியாலயம்,
பன்னங்கண்டி மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம்,
ஆனந்தநகர் அம்பாள்குளம் கிராம அபிவிருத்திச் சங்கம்,
அக்கராயன் கிராம அபிவிருததிச் சங்கம்,
இரத்தினபுரம் அறிவொளி சனசமூக நிலையம்,
வன்னேரிக்குளம் உதயதாரகை சனசமூக நிலையம்,
உருத்திரபுரம் உழவர் ஒன்றியம் சனசமூக நிலையம்,
வட்டக்கச்சி அறிவொளி சனசமூக நிலையம்,
கோணாவில் கிழக்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம்
ஆகிய கிராமிய அமைப்புகளுக்கான பொருட்களை கையளித்திருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Geen opmerkingen:

Een reactie posten