தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 7 maart 2013

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் 99 சதவீதம் நிறைவேற்றப்பட்டு விட்டன!- அமைச்சர் சமரசிங்க !


தமிழர்களை மீள்குடியமர்த்துதலில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாகவும், நல்லிணக்கக் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் 99 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் இலங்கை அமைச்சர்  சமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐநா மனித உரிமை பேரவையின் கூட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இலங்கை மனித உரிமை தூதரும், அமைச்சருமான மகிந்த சமரசிங்க பங்கேற்றுப் உரையாற்றிவிட்டு கொழும்பு திரும்பியிருந்தார்.
இந்நிலையில் இன்று அவர் கொழும்பில் அளித்த பேட்டியில் கூறியதாவது:–
இலங்கை அரசு நியமித்த போருக்கு பிந்திய படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதில் மிகுந்த முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.
ஐ.நா. மனித உரிமை பேரவை கூட்டத்தில் நான் கலந்து கொண்டு தெரிவித்த உண்மைக் கருத்துக்கள், அந்த பேரவையினாலும், உறுப்பு நாடுகளாலும் மிகுந்த கவனமுடன் ஆராயப்படும் என நம்புகிறேன்.
போருக்கு பிந்திய படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க குழு செய்த பரிந்துரைகள் ஏற்கனவே 99 சதவீதம் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
ஐ.நா. மனித உரிமை பேரவையில் பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்து, நாங்கள் எந்தளவுக்கு பணிகளில் முன்னேற்றம் கண்டுள்ளோம் என்பதை கண்டறியுமாறு கூறினேன். இலங்கையின் உண்மை நிலவரத்தை எனது உரையின் போது தெரிவித்தேன்.
எனது உரை தேவையான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் என நம்புகிறேன். யாரேனும் ஒரு சார்பாக செயல்படாமல், பாரபட்சமின்றி நடக்கிறவர்களாக இருந்தால் அவர்கள் எனது உரையின் நியாயத்தை உணர்வார்கள்.
போரினால் இடம் பெயர்ந்தவர்களை மீள்குடியமர்த்துவதில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் பொருளாதார முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Geen opmerkingen:

Een reactie posten