தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 2 maart 2013

இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு அதிகளவு ஆதரவு கிடைக்கும் சாத்தியம்! - லக்பிம !


ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட உள்ள தீர்மானத்திற்கு கூடுதல் ஆதரவு கிடைக்கும் சாத்தியம் காணப்படுவதாக லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முயற்சி எடுத்து வருகின்றன.
இந்தத் தீர்மானத்திற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் பெரும்பான்மை உறுப்பு நாடுகள் ஆதரவளிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த தடவையும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 21ம் திகதி இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
இதேவேளை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும், இலங்கைக்கு எதிராக அழுத்தங்களை பிரயோகிக்கவோ நடவடிக்கை எடுக்கவோ முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
- See more at: http://news.lankasri.com/show-RUmryDTWNYms3.html#sthash.GXssl9qG.dpuf

Geen opmerkingen:

Een reactie posten