இலங்கை அரசாங்கம், தனது கற்றுக்கொண்ட ஆணைக்குழு பரிந்துரைகளில், A9 நெடுஞ்சாலையை திறந்து விடவேண்டும் என்ற ஒரேயொரு பரிந்துரையை மட்டுமே இதுவரையில் நிறைவேற்றியுள்ளது.
ஏனைய பல பரிந்துரைகளை தொட்டும் பார்க்கவில்லை சிலவற்றை மேலோட்டமாக பார்த்துள்ளது. இதுதான் உண்மை.
இந்த நிலையில்தான், "எதுவும் எங்களுக்கு சொல்லித்தரவும் வேண்டாம், கற்றுத்தரவும் வேண்டாம், எங்களுக்கு நேரமும், அவகாசமும் மாத்திரம் தாருங்கள்" என்று எங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற அடிப்படையிலான இறுமாப்பான உரையை இலங்கை அரசாங்க பிரதிநிதி அமைச்சர் மகிந்த சமரசிங்க மனித உரிமை ஆணைக்குழுவில் ஆற்றியுள்ளார்.
அவரது பேச்சின் உள்ளடக்கம் இதைதான் கூறுகிறது. இதுதான். ஐநா சபைக்கும், உலகத்துக்கும் இலங்கை அரசாங்கம் அனுப்பியுள்ள செய்தி.
இது இலங்கையிலே தமிழ் மக்களிடம், "நீங்கள் ஐநாவுக்கும், உலகத்துக்கும் சென்று முறையீடு செய்யாதீர்கள்" என்று சொல்லப்படும் செய்தியின் மறுபக்கம்.
இந்த இரண்டுமே கேட்டு, கேட்டு சலித்துப்போன பழைய பஞ்சாங்க பல்லவி என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
ஐநாவில் அரசாங்க பிரதிநிதி குழுவின் தலைவர் மகிந்த சமரசிங்க ஆற்றியுள்ள அரசாங்கத்தின் ஐநா கொள்கை உரை தொடர்பாக கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
கடந்த முறையும் இதே "டைம் அண்ட் ஸ்பேஸ்" என்ற நேரமும், அவகாசமும் என்ற கோரிக்கைதான் முன்வைக்கப்பட்டது.
இந்த முறையும் அதுதான். ஆனால் கடந்தமுறை, கற்றுக்கொண்ட ஆணைக்குழு பரிந்துரைகளில் ஐம்பது விகிதத்தை தாம் நிறைவேற்றிவிட்டதாகவும் மிகுதி ஐம்பது விகிதத்தை நிறைவேற்றவே நேரமும், அவகாசமும் தாருங்கள் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதை மகிந்த சமரசிங்க, அமைச்சர் ஜி. எல். பீரிஸ் மற்றும் அன்றைய அமைச்சரவை சட்ட ஆலோசகர் மொஹான் பீரிஸ் ஆகியோர் கூட்டாக சொன்னார்கள். இது உண்மைக்கு புறம்பான அப்பட்டமான கூற்று என அப்போதே சொன்னோம்.
ஐநா சபையில் எதையாவது சொல்லிவிட்டு திரும்பி வாருங்கள் பிறகு அடுத்த சந்தர்ப்பம் வரும்போது பார்த்துகொள்ளலாம் என்பதுதான் ஐநா தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் நிரந்தர கொள்கை.
ஆனால், அந்த அடுத்த சந்தர்ப்பம் மீண்டும் இன்று வந்துவிட்ட நிலையில், இன்று மீண்டும் அதே கோரிக்கையை மகிந்த சமரசிங்க முன்வைத்துள்ளார்.
இலங்கை அரசாங்கம், A9 நெடுஞ்சாலையை திறந்து விடவேண்டும் என்ற ஒரேயொரு கற்றுக்கொண்ட ஆணைக்குழு பரிந்துரையை மட்டுமே இதுவரையில் நிறைவேற்றியுள்ளது.
உண்மையில் கற்றுக்கொண்ட ஆணைக்குழு அறிக்கை வெளிவரும் முன்னரேயே இந்த A9 பாதை ஏறக்குறைய திறந்துவிடப்பட்டிருந்தது. இன்று அது புனரமைக்கப்பட்டுள்ளது.
இந்த பாதை திறப்பு அரசாங்கத்துக்கு அரசியல் இராணுவ ரீதியாக தேவையாகவும் இருக்கிறது.
இதைதவிர ஏனைய கற்றுக்கொண்ட ஆணைக்குழு பரிந்துரைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
தடுத்து வைக்கப்பட்டிருப்போர், காணாமல் போனோர், சிவில் நிர்வாகத்தில் இராணுவ தலையீடு, திட்டமிட்ட குடியேற்றம், தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு உட்பட பல முக்கியமான பரிந்துரைகளை தொட்டும் பார்க்கவில்லை சிலவற்றை மேலோட்டமாக பார்த்துள்ளது.
இதுதான் உண்மை. இந்நிலையில் மகிந்த சமரசிங்கவின் ஐநா உரையை உலகம் ஏற்றுகொள்ள முடியாது.
- See more at: http://news.lankasri.com/show-RUmryDTWNYms4.html#sthash.25Dw7LQi.dpufஇந்த நிலையில்தான், "எதுவும் எங்களுக்கு சொல்லித்தரவும் வேண்டாம், கற்றுத்தரவும் வேண்டாம், எங்களுக்கு நேரமும், அவகாசமும் மாத்திரம் தாருங்கள்" என்று எங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற அடிப்படையிலான இறுமாப்பான உரையை இலங்கை அரசாங்க பிரதிநிதி அமைச்சர் மகிந்த சமரசிங்க மனித உரிமை ஆணைக்குழுவில் ஆற்றியுள்ளார்.
அவரது பேச்சின் உள்ளடக்கம் இதைதான் கூறுகிறது. இதுதான். ஐநா சபைக்கும், உலகத்துக்கும் இலங்கை அரசாங்கம் அனுப்பியுள்ள செய்தி.
இது இலங்கையிலே தமிழ் மக்களிடம், "நீங்கள் ஐநாவுக்கும், உலகத்துக்கும் சென்று முறையீடு செய்யாதீர்கள்" என்று சொல்லப்படும் செய்தியின் மறுபக்கம்.
இந்த இரண்டுமே கேட்டு, கேட்டு சலித்துப்போன பழைய பஞ்சாங்க பல்லவி என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
ஐநாவில் அரசாங்க பிரதிநிதி குழுவின் தலைவர் மகிந்த சமரசிங்க ஆற்றியுள்ள அரசாங்கத்தின் ஐநா கொள்கை உரை தொடர்பாக கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
கடந்த முறையும் இதே "டைம் அண்ட் ஸ்பேஸ்" என்ற நேரமும், அவகாசமும் என்ற கோரிக்கைதான் முன்வைக்கப்பட்டது.
இந்த முறையும் அதுதான். ஆனால் கடந்தமுறை, கற்றுக்கொண்ட ஆணைக்குழு பரிந்துரைகளில் ஐம்பது விகிதத்தை தாம் நிறைவேற்றிவிட்டதாகவும் மிகுதி ஐம்பது விகிதத்தை நிறைவேற்றவே நேரமும், அவகாசமும் தாருங்கள் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதை மகிந்த சமரசிங்க, அமைச்சர் ஜி. எல். பீரிஸ் மற்றும் அன்றைய அமைச்சரவை சட்ட ஆலோசகர் மொஹான் பீரிஸ் ஆகியோர் கூட்டாக சொன்னார்கள். இது உண்மைக்கு புறம்பான அப்பட்டமான கூற்று என அப்போதே சொன்னோம்.
ஐநா சபையில் எதையாவது சொல்லிவிட்டு திரும்பி வாருங்கள் பிறகு அடுத்த சந்தர்ப்பம் வரும்போது பார்த்துகொள்ளலாம் என்பதுதான் ஐநா தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் நிரந்தர கொள்கை.
ஆனால், அந்த அடுத்த சந்தர்ப்பம் மீண்டும் இன்று வந்துவிட்ட நிலையில், இன்று மீண்டும் அதே கோரிக்கையை மகிந்த சமரசிங்க முன்வைத்துள்ளார்.
இலங்கை அரசாங்கம், A9 நெடுஞ்சாலையை திறந்து விடவேண்டும் என்ற ஒரேயொரு கற்றுக்கொண்ட ஆணைக்குழு பரிந்துரையை மட்டுமே இதுவரையில் நிறைவேற்றியுள்ளது.
உண்மையில் கற்றுக்கொண்ட ஆணைக்குழு அறிக்கை வெளிவரும் முன்னரேயே இந்த A9 பாதை ஏறக்குறைய திறந்துவிடப்பட்டிருந்தது. இன்று அது புனரமைக்கப்பட்டுள்ளது.
இந்த பாதை திறப்பு அரசாங்கத்துக்கு அரசியல் இராணுவ ரீதியாக தேவையாகவும் இருக்கிறது.
இதைதவிர ஏனைய கற்றுக்கொண்ட ஆணைக்குழு பரிந்துரைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
தடுத்து வைக்கப்பட்டிருப்போர், காணாமல் போனோர், சிவில் நிர்வாகத்தில் இராணுவ தலையீடு, திட்டமிட்ட குடியேற்றம், தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு உட்பட பல முக்கியமான பரிந்துரைகளை தொட்டும் பார்க்கவில்லை சிலவற்றை மேலோட்டமாக பார்த்துள்ளது.
இதுதான் உண்மை. இந்நிலையில் மகிந்த சமரசிங்கவின் ஐநா உரையை உலகம் ஏற்றுகொள்ள முடியாது.
Geen opmerkingen:
Een reactie posten