தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 3 maart 2013

ஜெனீவாவில் சனல் 4 ஆவணப்படம் ''நோ பயர் ஸோன்'' காண்பித்ததற்கு இலங்கை கண்டனம் !


ஜெனீவாவில் ஐநா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் நடைபெறும் வேளையில், அங்கு இன்னுமொரு மண்டபத்தில் நேற்று முன்தினம் ''நோ பயர் ஸோன்'' மற்றும் ''இலங்கையின் கொலைக்களங்கள்'' என்ற சனல் 4  ஆவணப்படங்கள் காண்பிக்கப்பட்டமை குறித்து இலங்கை அரசாங்கம் தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
மனித உரிமைகள் கண்காணிப்பகம் சர்வதேச மன்னிப்பு சபை மற்றும் FIFDH  என்ற 3 அமைப்புக்களின் அனுசரணையுடன் இந்த இலங்கை பற்றிய போலியான தகவல்களைக் கொண்ட இந்த தொலைக்காட்சிப் படம் காண்பிக்கப்பட்டது.
இம்மூன்று அமைப்புக்களும் இந்த தொலைக்காட்சிப் படத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும் தகவல்கள் குறித்து முழுப்பொறுப்பை ஏற்றுக்கொள்ள முடியுமா என்ற கேள்வியை இலங்கை அரசாங்கம் எழுப்பியுள்ளது.
சனல் 4 தொலைக்காட்சிச் சேவையில் காண்பிக்கப்பட்ட இந்த விவரணப் படம் உண்மையானதா? அல்லது சோடிக்கப்பட்டதா? என்று ஆராய்ந்து முடிவெடுப்பதற்கு நிபுணர்களுக்கு சில நாட்கள் அல்லது பல வாரங்கள் எடுக்கும் என்று இலங்கை அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
சனல் 4 தொலைக்காட்சி சேவையில் அறிவிப்பாளராக பணிபுரியும் பெண்மணி எல்.ரி.ரி.ஈ. இயக்கத்தில் லெப்டினன் கேர்னல் பதவியை வகிக்கும் விடுதலைப் புலிகளின் தற்கொலை குண்டுதாரி என்றும் அவரது பெயர் செல்வி இசைப்பிரியா என்றும் இலங்கை தனது கண்டனத்தில் மேலும் தெரிவித்துள்ளது.
- See more at: http://news.lankasri.com/show-RUmryDTWNYmv3.html#sthash.1xmDXeQG.dpuf

Geen opmerkingen:

Een reactie posten