இலங்கையில் நான் தமிழர்களுக்கு தனி மாநிலம் வாங்கித் தருவேன். அது என்னால்தான் முடியும். வெறும் அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கும் இங்குள்ளவர்களால் முடியாது என ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நடைபெறும் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மாநாட்டுக்கு வந்திருந்த ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி, செய்தியாளர்களைச் சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சந்திப்பின்போது அவர்,
நான் இலங்கை சென்று அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்தித்துவிட்டு வந்தேன்.
தமிழர்களுக்கு தனி மாநில சுயாட்சிக்காக நான் ராஜபக்சவை வலியுறுத்தி வருகிறேன்.
அது என்னால்தான் முடியும். வெறும் அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கும் இங்குள்ளவர்களால் முடியாது.
ராஜபக்சவை வலியுறுத்தி தமிழர்களுக்கு தனி மாநிலம் நான் வாங்கித் தருவேன் என்றார்.
Geen opmerkingen:
Een reactie posten