தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 8 maart 2013

இலங்கை விவகாரம்!- உண்ணாவிரத போராட்டத்தில் குதித்த சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள்!


இலங்கைக்கு எதிராக சர்வதேச போர்க் குற்ற விசாரணை வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் லயோலா கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வர உள்ள தீர்மானத்தினால் பயன் ஏதும் இல்லை.
இலங்கையின் போர்க் குற்றங்களுக்கு எதிராக சர்வதேச விசாரணை வேண்டும்,
இலங்கை தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும்.
அதே சமயம் இந்த விசாரணையில் இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் பங்கேற்க கூடாது.
இலங்கை மீது இந்தியா பொருளாதார தடை விதிக்க வேண்டும்
என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன், சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் பிரிட்டோ, சதீஷ், மணி, திலீப் உள்ளிட்ட 7 மாணவர்கள் இன்று காலை கல்லூரி வளாகத்தினுள்ளேயே உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.
பின்னர் அவர்களுக்கு ஆதரவாக மேலும் 2 மாணவர்கள் போராட்டத்தில் இணைந்துகொண்டதை தொடர்ந்து, உண்ணாவிரதத்தில் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
அதே சமயம் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவாக, இதர மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி வளாகத்தினுள் திரண்டுள்ளதால் அங்கு பெரும் பரபரப்பு காணப்படுகிறது.
இந்நிலையில் இது குறித்து தகவலறிந்த பொலிஸார் கல்லூரிக்கு விரைந்து வந்தனர். மாணவர்கள் வெளியே வந்துவிடாதவாறு, வாயிலுக்கு வெளியே ஏராளமான  பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்..
லயோலா கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக மற்ற கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதிக்கக்கூடும் என்பதால், மேலும் பரபரப்பு நிலவுகிறது.

Geen opmerkingen:

Een reactie posten