இந்தியாவைச் சேர்ந்த பத்திரிகையாளரான மொஹூயா சௌத்ரி என்பவரால் தயாரிக்கப்பட்ட “சிறிலங்காவில் புதைக்கப்பட்ட நீதி’ என்ற ஆங்கில ஆவணப்படமே மேற்படி திரையிடப்படவுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் சுமார் 50 ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து “சேவ் த டமில்ஸ்’ (தமிழர்களைக் காப்பாற்றுங்கள்) என்ற பெயரில் ஒரு இயக்கத்தை ஆரம்பித்துள்ளனர்.
“சிறிலங்கா போர்க்குற்றவாளிகளைத் தண்டிக்கவும், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கிடைக்கவும் ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தில் இந்தியா குரல் கொடுக்க வேண்டும்” என வலியுறுத்தி இந்த அமைப்பினர் இன்று புதுடெல்லியில் விவாத கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
டெல்லி கான்ஸ்டிட்யூஷன் கிளப் அரங்கில் இன்று மாலை 5 மணிக்கு தமிழர்களுக்கு நீதி கோரி விவாதம் ஒன்று நடைபெறவுள்ளது.
அதில், சிறிலங்காப் போருக்குப் பிந்திய தமிழர்களின் நிலைமை குறித்து பத்திரிகையாளர் மொஹூயா சௌத்ரி தயாரித்த சிறிலங்காவில் புதைக்கப்பட்ட நீதி என்ற ஆங்கில ஆவணப்படம் திரையிடப்படும். என அந்த அமைப்பைச் சேர்ந்த சா. இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
மொஹூயா சௌத்ரியின் போருக்கு பிந்திய செய்தி சேகரித்த அனுபவங்கள், போர்க் குற்றங்கள் குறித்து பார்வையாளர்களுடன் பத்திரிகையாளர் ராஜேஷ் சுந்தரம் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டு விவாதிப்பர் எனவும் கூறப்பட்டுள்ளது.
அந்தக் கூட்டத்தில் டி. ராஜா உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்வர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Geen opmerkingen:
Een reactie posten