தேசிய இயக்கங்களின் ஒன்றியம் இந்த போராட்ட நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. இதில், தேசிய சுதந்திர முன்னணி, தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் மற்றும் முச்சக்கரவண்டி உரிமையாளர்களின் தொழிற்சங்கங்கள் என்பன கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
இதன்காரணமாக காலி வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்தன.
ஆர்ப்பாட்டக்காரர்கள் “அமெரிக்காவின் தீர்மானங்கள் எமக்குத் தேவையில்லை", “நவநீதம்பிள்ளை ஒரு பூனை", “இந்தியாவின் றோவும் அமெரிக்காவின் சி.ஐ.ஏ.யும் இதற்கு பின்னணி", “நாம் யாருக்கும் அடிபணிய மாட்டோம்" போன்ற கோஷங்களை எழுப்பியவாறு அமெரிக்கத் தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
http://news.lankasri.com/show-RUmryDRVNZmo6.html
Geen opmerkingen:
Een reactie posten