தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 12 maart 2013

பொதுநலவாய மாநாட்டில் பிரித்தானியா பங்குகொள்ள கூடாது: டேவிட் மிலிபாண்ட்


இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் பிரித்தானியா கலந்து கொள்ளக்கூடாது என முன்னாள் பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் டேவிட் மிலிபாண்ட் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய காடியன் செய்தித்தாளில் அவர் எழுதியுள்ள கட்டுரையிலேயே இந்த கருத்தினை அவர் வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் மனித உரிமை விடயங்களை நன்கு கருத்தில் கொண்டு பிரித்தானிய அரசாங்கம் உரிய முடிவை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2009 ஆரம்பத்தில் பிரான்சின் வெளிவிவகார அமைச்சர் பேர்நாட் குச்சநாருடன் இலங்கை செல்லும் வாய்ப்பு தமக்கு கிடைத்ததாக தெரிவித்துள்ள அவர், அந்த விஜயத்தின் போது வட மாகாணத்திற்கும் சென்றதாக அந்த கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
அங்கு உள்ள முகாம்களுக்கு சென்றபோது, தமிழ் பெண்கள் பதாதைகளில் கணவர் அல்லது பிள்ளைகளின் படங்களுடன் பெயர்களையும் எழுதி அவர்களை கண்டுபிடித்துத் தருமாறு கண்ணீர் விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
அப்படியான காட்சிகளை தம்மால் மறக்க முடியாது எனவும் த காடியன் செய்தித்தாளிற்கு எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.  அத்துடன், தமது தகவல்களுக்கு ஆதாரமாக தருஸ்மான் மற்றும் நவநீதம்பிள்ளை ஆகியோரின் அறிக்கைகளை எடுத்துக் கொள்ளலாம் எனவும் டேவிட் மிலிபாண்டின் கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten