நாட்டில் 73 சதவீதமான மாணவர்களின் மதிய உணவினை இல்லாதொழித்திருப்பதாகவும் நாட்டில் இலவசக் கல்வி நடைமுறையில் இருக்கின்றது. ஆனால் தற்காலத்தில் மாணவர்களிடமிருந்து பணம் அறவிடப்படுவது எதற்காக என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன் அம்பாந்தோட்டை ஜனாதிபதி ராஜபக்ஷவின் மாவட்டமாகும். அங்கு இயங்கும் ஒரு பாடசாலையில் மாணவர்களிடமிருந்து நான்காயிரம் ரூபா பாடசாலை நிர்வாகத்தினால் கோரப்பட்டுள்ளது.
இந்த பணத்தை திரட்டிக்கொள்ள முடியாத நிலையில் தந்தையொருவர் தனது குடும்ப ஜீவனோபாயத்துக்கான படகினை விற்று பணத்தை செலுத்தியுள்ளார்.
எனவே இன்று ஒட்டுமொத்த கல்வித்துறையும் பாரிய சீரழிவினை எதிர்கொண்டிருக்கின்றது. அது மாத்திரமின்றி கல்வித்துறை முற்றுமுழுதாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புகைத்தல் காரணமாக வருடமொன்றிற்கு 21ஆயிரம் பேர் மரணம்
இலங்கையில் புகைத்தல் காரணமாக வருடாந்தம் 21, 000 பேர் வரையில் மரணிப்பதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
புகைப்பதால் ஏற்படும் நோய்கள் காரணமாக பீடிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோருக்கு அவர்களது குடும்பங்கள் பெருந்தொகை பணத்தை செலவிட நேரிடுகின்றது.
சிகரெட் புகையை கர்ப்பிணித் தாய்மார்கள் சுவாசிப்பதால் வருடாந்தம் ஏற்படுகின்ற கரு கலைப்புகளின் எண்ணிக்கையை இதுவரை மதிப்பிட முடியாமற்போயுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
அத்துடன், புகைப் பிடித்தலை தடுப்பதற்கு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
ஹலால் சான்றிதழ் குறித்த இறுதித் தீர்மானம் எதிர்வரும் திங்கட்கிழமை வெளியிடத் தீர்மானம்
ஹலால் சான்றிதழ் தொடர்பான இறுதி தீர்மானம் எதிர்வரும் திங்கட் கிழமை வெளியிடப்படும் என அகில இலங்கை ஜமியத்துல் உலமா அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் ஊடக பேச்சாளர் பாதில் பாரூக் இதனை தெரிவித்துள்ளார்.
ஹலால் சான்றிதழ் விநியோக நடவடிக்கை கைவிட போவதாக வெளியான செய்தி தொடர்பாக அவரிடம் வினவப்பட்ட போதே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதனிடையே, ஹலால் சான்றிதழ் தொடர்பாக நேற்றைய தினம் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் கலந்துரையாடியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மின்கட்டணங்களில் சீர்திருத்த நடவடிக்கை
எதிர்வரும் வாரங்களில் ஏதேனும் சில சதவீதங்களால் மின் கட்டணம் சீர்த்திருத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
மின்கட்டணம் சீர்த்திருத்தம் செய்யப்பட வேண்டிய விதம் குறித்து விடயத்திற்கு பொறுப்பான அமைச்சினால் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, எதிர்வரும் 28 ஆம் திகதி வரை இதற்கான மக்கள் கருத்துக்கள் பெற்றுக் கொள்ளப்படும் என மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten