தி.மு.க. தனது கூட்டணி உறவைப் பயன்படுத்தி இந்திய அரசை, இலங்கைக்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு இணங்க வைக்க வேண்டும். இவ்வாறு ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பானது, தமிழக முன்னாள் முதமைச்சர் திரு. கருணாநிதி அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது.
இந்திய அரசாங்கம், ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையின் (UNHRC) கூட்டத்தொடரில் இலங்கையில் நடைபெற்ற தமிழர் இனப்படுகொலைக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்றுக்கு ஆதரவாக தீர்மானம் கொண்டுவர வேண்டும். இதனை காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க. நிபந்தனையாக வைக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றது.
திரு. கருணாநிதி அவர்களுக்கு தற்போது கிடைத்துள்ள அரிய சந்தர்ப்பத்தினை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கடிதத்தில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் இலங்கைத் தமிழர் விடையத்தில் முழுமையான ஆதரவு நிலையை வெளிப்படுத்தி இருக்கின்றார். இதற்கு நாங்கள் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளோம்.
ஆனால் திரு. கருணாநிதி அவர்கள் அப்படியான உறுதியான நிலைப்பாட்டில் இல்லை. 2009 ஆண்டு இலங்கைத் தீவில் போர் நடைபெற்றகாலப் பகுதியில் திரு. கருணாநிதி அவர்கள் நடந்து கொண்டதை நினைவுபடுத்தி பார்க்கும் போது அவர் மௌனமாக இருந்ததுடன், உறுதியற்ற நிலைப்பாட்டினையே எடுத்திருந்தார். அவர் காங்கிரஸ் கட்சியின் இலங்கை சார்பு கொள்கையை மறைமுகமாக ஆதரித்திருந்தார்.
கடிதத்தில் மேலும் குறிப்பிடப்படுவதானது,
கடிதத்தில் மேலும் குறிப்பிடப்படுவதானது,
திரு. கருணாநிதி அவர்கள் மக்களிடத்தில் இழந்த நன்மதிப்பை மீள பெறவேண்டும் என்றால் காங்கிரஸ் கூட்டணியில் இணைந்திருப்பதனைப் பயன்படுத்தி காங்கிஸ் கட்சிக்கு ஒரு பெரிய அழுத்தத்தினை கொடுப்பதன் மூலம் இலங்கையில் நடைபெற்ற உள்ளநாட்டு போரில் நடந்த இனப்படுகொலைக்கு எதிரான சர்வதேச விசாரணைக்கு இணங்கவைக்க வேண்டும்.
மேலும் திரு. கருணாநிதி அவர்கள் காங்கிரஸ் கூட்டணயின் ஒரு முக்கியமானவர், எனவே அவர் அழுத்தம் கொடுத்தால் காங்கிரஸ் கட்சியினர் நிச்சயமாக செவிமடுப்பார்கள் என்று கூறினார் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பின் செய்தித் தொடர்பாளர்.
கடந்த காலத்தில் திரு. கருணாநிதி அவர்கள் செய்த தவறை திருத்திக் கொள்வதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.
இதனை சரியாக பயன்படுத்திக் கொண்டால் இதனால் அவர் மீது அனைவருக்கும் ஒரு நல்லெண்ணம் ஏற்படவும் காரணமாகிவிடும் என்று கூறினார் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பின் செய்தித் தொடர்பாளர்.
இந்தியா, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்புரிமையை பெறுவதில் ஆர்வம் காட்டும் இந்த வேளையில் பல சர்வதேச நாடுகள், இலங்கை விடயத்தில் இந்தியா எவ்வாறு நடந்து கொள்கின்றது என்பதை அவதானித்துக் கொண்டிருக்கின்றன.
எனவே இந்தியா, இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரில் இனப்படு கொலை செய்யப்பட்டோர்கள் விடயத்தில் இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டினை எடுத்து பன்னாட்டு விசாரணைக்கு ஆதரவு கொடுக்கும் என்ற நம்பிக்கையில் சர்வதேசமும் நாமும் எதிர்பர்த்துக்கொண்டு இருக்கின்றோம்.
http://www.tamilwin.net/show-RUmryDTcNYjt5.html
Geen opmerkingen:
Een reactie posten