இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா மன்ற மனித உரிமைகள் கவுன்சிலின் தற்போதைய அமர்வில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்தின் வரைவை புலம்பெயர் இலங்கைத் தமிழர்களின் அமைப்பான நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஓரளவு வரவேற்றிருக்கிறது.
இந்தத் தீர்மானங்களின் மூலம் இலங்கை தமிழர்களின் பிரச்சினையை சர்வதேச சமூகம் அங்கீகரித்துள்ளதாக தாம் பார்ப்பதாகக் கூறும், அந்த அமைப்பின் ஜெனிவா மனித உரிமைகள் பேரவை அமர்வுகள் குறித்த விடயங்களுக்கான இணைப்பாளரான முருகையா சுஜிந்தன், ஒன்றுமே இல்லாத நிலையில் இப்படியான தீர்மானங்களாவது வருவது வரவேற்கத்தக்கதே என்று கூறியுள்ளார்.
நாடுகடந்த அரசாங்கத்தைப் பொறுத்தவரை, இலங்கைப் போர் குற்றங்கள் தொடர்பில் ஒரு சர்வதேச பொறிமுறையும், சர்வதேச சுயாதீன விசாரணையுமே தமது கோரிக்கையாக இருப்பதாகக் கூறும் அவர், ஆனால் இந்த பிரேரணையில் அவை இடம்பெறவில்லை என்று கவலை வெளியிட்டார்.
அதேவேளை, இலங்கை அரசாங்கம் கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஐநா மனித உரிமை பேரவை ஒரு கால எல்லையை நிர்ணயிக்க வேண்டும் என்றும் கூறினார்.
இது தொடர்பாக தொடர்ச்சியாக தாம் குறிப்பிட்ட நாடுகளின் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியாத காரணத்தினால் ஆயுதம் ஏந்த நேரிட்டது!- கோத்தபாய
[ சனிக்கிழமை, 09 மார்ச் 2013, 04:40.20 PM GMT ]
பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியாத காரணத்தினால் ஆயுதம் ஏந்த நேரிட்டது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சமாதான பேச்சுவார்த்தைகளின் ஊடாக பிரச்சினைக்கு தீர்வு காண பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. முயற்சிகள் தோல்வியடைந்ததனைத் தொடர்ந்து முப்படையினரின் ஒத்துழைப்புடன் யுத்தம் முன்னெடுக்கப்பட்டது.
30 ஆண்டுகளாக யுத்தம் இடம்பெற்ற நாட்டில் தற்போது பொருளாதார அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten