தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 12 maart 2013

தமிழ்நாட்டு மாணவர்களின் எழுச்சிப் போராட்டம்! நம்பிக்கை தருகின்றது! : திசைகள் இளையோர் அமைப்பு


தமிழ்நாட்டு மாணவர்களின் எழுச்சிப்போராட்டம் தரணியெங்கும் வாழும் தமிழருக்கு புது நம்பிக்கை தருகின்றது என  டென்மார்க் திசைகள் இளையோர் அமைப்பு தெரிவித்துள்ளது.
கடல்கள் பல நம்மைப் பிரித்தாலும் சூழ்நிலை எம்மை திக்குத் திக்காக வைத்தாலும் தமிழர் என்கின்ற தொப்புள்க்கொடி உறவு எமை, எப்போதும் எந்த சூழ்நிலையிலும் தழராது கைகோர்த்து இணைந்திருக்கும் என்பதை உங்கள் மூலம் மறுபடியும் உணர்கின்றோம், ஆனந்தமடைகிறோம்.
கடந்த காலங்களில் காயங்கள் பலதை சந்தித்த எம் இதயங்களில், உங்களின் உணர்வுக் குரல்கள் எமக்கு உற்சாகத்தை தருகின்றது. எத்தடையையும் உடைத்து தமிழனுக்கு விடிவு மலர்ந்துவிடும் என்று நம்பிக்கை அளிக்கின்றது.
நாம் தமிழ் இளையோர் எதிர்காலத் தமிழ்த் தலைமுறையின் ஆணிவேர்கள் தமிழ் இனத்தின் எதிர்காலத்தை இவ்வுலகில் வடிவமைப்பவர்கள். எம்மால் முடியும், நாம் நினைத்தால் சாத்தியமடையும், இல்லாவிட்டால் சாத்தியமடைய வைப்போம், மாற்றி அமைப்போம் என்று உறுதியாக காலவரையின்றி உண்ணாவிரதப்போராட்டத்தை தொடர்கிறீர்கள், இது உங்களின் அசையா இனப்பற்றை வெளிக்காட்டுகின்றது.
காலங்காலமாக தமிழர்கள் மீது சிங்களம் கோரத்தாண்டவம் நடாத்திக் கொண்டிருக்கின்றது. இது உலகறிய 2009ம் ஆண்டில் முற்றிலும் திட்டமிட்ட தமிழினப் படுகொலையாக மாறியது. உலகமோ தனது கண்களை மூடியிருந்தது, அப்போதும் உலகில் அனைத்து திசையிலும் தமிழன் தரையிறங்கிப் போராடினான், அனால் எமக்கு நீதி கிடைக்கவில்லை இன்று இலட்சக்கணக்கான உயிர்களை நாம் இழந்து உலகமே கண்டறியாத கேவலமான, நெஞ்சைப் பிழக்கவைக்கும் பல சம்பவங்களை சிறார்களுக்கும், தமிழ்ப் பெண்களுக்கும் ஏற்படுத்தி, தொடர்ந்தும் சொந்த மண்ணில் அடிமையாய் செத்துப்பிழைக்கும் நிலையில் எம் இனம் உள்ளது, இதை Channel 4 ஆவணமாக திரையாக்கி உலகிற்கு வெளிக்காட்டி உள்ளது.
இந்த ஆவணப் படத்தில் அடங்காத உண்மைகள் இன்னும் பல. நாம் இந்த சந்தர்ப்பந்தை நழுவவிடக்கூடாது இன்னுமோர் பேரழிவை எம்மினம் தாங்காது. இதை நீங்கள் நன்றாக உணர்ந்திருக்கின்றீர்கள் உறுதியுடன் செயற்படுகின்றீர்கள்!
தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி சென்று நேர் வழி சென்றால் நாளை நமதே இந்த நாளும் நமதே என்று மனம் தளராமல் அனைத்துலக தமிழர்களும் நீங்கள் முன்வைத்த கோரிக்கைகளை நாம் வாழும் அவ்வவ் நாடுகளில் முன்வைப்போம், நீதிக்காகப் போராடுவோம் என்று உறுதி மொழி எடுப்போம் தமிழர் தாயகம் மலரும். இது காலத்தின் கட்டாயம்.

Geen opmerkingen:

Een reactie posten