மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழுகாமத்தில் 15வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்துக்குட்படுத்திய குடும்பஸ்தரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பழுகாமம் முதலாம் வட்டாரத்தை சேர்ந்த வினோஜன் (25வயது) என்ற குடும்பஸ்தர் கைதுசெய்யப்பட்டு களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது நீதிபதி கே.கருணாகரன் இந்த உத்தரவை பிறப்பித்ததாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
பழுகாமத்தில் உள்ள 10ம் தரத்தில் கல்வி பயிலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரியின் கணவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ள தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் அபூபக்கர் தெரிவித்தார்.
இன்று காலை இருவரும் ஒன்றாக இருப்பதைக் கண்டு குறித்த சிறுமியின் தாயார், இளைஞன் மீது தாக்குதல் நடத்தி பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
சுயவிரும்பின் பேரிலேயே இவரும் குற்றம்புரிந்துள்ள நிலையிலும் குறித்த சிறுமி 15வயதை உடையதால் சட்ட நடவடிக்கையெடுக்கப்பட்டதாகவும் பொலிஸ் பரிசோதகர் அபூபக்கர் தெரிவித்தார்.
சிறுமியை மருத்துவ பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் மேலதிக விசாரணை இடம்பெற்றுவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten