ஜேர்மனியில் நேற்று ஆரம்பமான உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 12வது மாநாடு கோலாகலமாக நடைபெற்ற வருகின்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தமிழர்கள் வாழ்கின்ற இடங்களிலெல்லாம் தமிழ் வாழ வேண்டும் என்பதற்காக உலகத்தமிழ் பாண்பாட்டு இயக்கத்தினர் இதய தாகத்தோடு, உணர்வுகளோடும் கொள்கை, இலட்சியப் பற்றோடும் இயங்கி வருவதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன் என தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமிழை வாழ வைக்க வேண்டுமென்று இந்த மாநாட்டை நடத்தும் உலகத்தமிழ் பாண்பாட்டு இயக்கத்தினருக்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
பண்பாடு என்பது எமது வாழ்வின் உயர்ந்த ஒழுக்கத்தைப் பற்றியே கூறுகிறது.
தமிழ் மொழியை நாங்கள் பேசாவிட்டால், அதனைக் கையாளாவிட்டால், அதில் வாழ்வும் வளமும் பெறாது விட்டால் தமிழர்களாக இருக்க மாட்டோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூத்த மொழியான தமிழின் சொந்தக்காரர்களாகிய நாம் ஆட்சியதிகாரமற்ற இனமாக உள்ளோம்: துரைராஜா
மூவாயிரம் ஆண்டு பழமையான தமிழ் மொழிக்குச் சொந்தக்காரராகிய நாம் இன்று ஆட்சியதிகாரமற்ற ஒரு இனமாக உள்ளோம் என உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் சிறப்புத் தலைவர் துரைராஜா தெரிவித்துள்ளார்.
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 12வது தமிழ்ப் பண்பாட்டு மாநாடும் 40வது ஆண்டு நிறைவு விழாவும் ஜேர்மனி ஹம் நகரில் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
மேலும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் தனது உரையில்,
உலகத்தில் 6 மொழிகள் தான் உலகில் செம்மொழியாக இருக்கின்றது. அதில் தமிழ்மொழியும் ஒரு செம்மொழி என்பதையிட்டு நாம் மிகவும் பெருமையடைகிறேன்.
ஒரு மொழி செம்மொழியாவதற்கு குறைந்தது 1500 ஆண்டுகளுக்கு மேல் பாவனையில் இருந்திருக்க வேண்டும். ஆனால் தமிழ் மொழி 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றது.
அவ்வாறான மூத்த மொழியின் சொந்தக்காரர்கள் நாம். உரிமைக்காரர்கள் நாம். ஆனால் இன்று ஆட்சியதிகாரமில்லாத ஒரு இனமாக உள்ளோம்.
கிட்டத்தட்ட உலகத்திலே 160 நாடுகளுக்கு மேல் தமிழர்கள் வாழ்கின்றார்கள். எமக்கென்று நாடு இல்லை. ஒரு ஆட்சியதிகாரமில்லாத நிலையில் வாழ்கிறோம் என்பதை எத்தனை பேர் சிந்தித்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியில் சிறப்புடன் நடைபெற்று வரும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் மகாநாடு
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 12வது தமிழ்ப் பண்பாட்டு மாநாடும் 40வது ஆண்டு நிறைவு விழாவும் 2ம் நாள் மகாநாடு சிறப்பாக ஜேர்மனி ஹம் நகர் ஆலயத்தின் வழிபாட்டுடன் ஆரம்பமானது.
உலகெங்கும் 50க்கும் அதிகமான நாடுகளில் கிளைகளில் இருந்து வருகை தந்த அரசியல் பிரமுவர்கள் கல்வித் துறை சார் பேராசிரியாகள் அடங்கலாக இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் பல சமூக ஆர்வலர்கள் ஹம் ஆலயத்தின் வழிபாட்டுடன் இரண்டாம் நாள் நிகழ்வுகளை ஆரம்பித்தனர்.
இம் மாநாட்டிற்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழகத்தின் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் உட்பட பேராசிரியர்கள் தமிழ்துறை ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இம் மகாநாட்டில் பழைமையான பத்திரிகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டதுடன் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல உரைகளும் இடம்பெற்றதுடன், ஜேர்மனி நாட்டின் மாகாணக மட்ட அரசியல் பிரமுவர் ஒருவரும் இம் மகாநாட்டை கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
http://www.tamilwin.com/show-RUmszATZKWnq4.html
Geen opmerkingen:
Een reactie posten