அமெரிக்கா அரபு நாடுகள் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளோடு தற்போது பிரித்தானியாவும் இணைந்துள்ளது. சிரியா மற்றும் ஈராக்கில் நிலைகொண்டுள்ள ISIS தீவிரவாதிகள் மீது விமான தாக்குதல் நடத்த சமீபத்தில் பிரித்தானிய பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தது. இதனை தொடர்ந்து சைப்பிரஸ் நாட்டில் உள்ள பிரித்தானிய விமானப்படைத் தளத்திற்கு பிரித்தானிய போர் விமானங்கள் சென்றது. அங்கே ரகசிய முகாம் இட்டு, தாக்குதல் திட்டங்களை பிரித்தானியப் படைகள் தீட்டி வருகிறது. இன் நிலையில் நேற்றைய தினம்(02) பிரித்தானியப் பிரதமர் திடீரென சைப்பிரஸ் விமானப்படை தளத்திற்குச் சென்றுள்ளார்.
அங்கே தயார் நிலையில் இருந்த போர் விமானங்களைப் பார்வையிட்ட அவர், அங்கே கடமையில் இருந்த விமானிகளிடமும் பேசினார். மேலதிகமாக 2 ரொனேடோ விமாங்களை தாம் சைப்பிரஸ் தளத்திற்கு அனுப்பிவைக்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானியா ISIS தீவிரவாதிகள் மீது பாரிய அளவில் தாக்குதல் தொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அவர்களும் சும்மா இருக்கப்போவது இல்லை. பிரித்தானியாவின் தலைநகரில் வெடிகுண்டுகளை வைக்க அவர்களும் திட்டங்களைத் தீட்டுவார்கள் என்று எதிர்பார்கப்படுகிறது.
Geen opmerkingen:
Een reactie posten