தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 26 oktober 2014

மட்டக்களப்பில் பிக்குவின் அடாவடித்தனம்! வெளிவந்துள்ளது இரண்டாவது ஆதாரம் !

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதியின் அடாவடித்தனம் தொடர்பில் இரண்டாவது ஆதாரமும் தற்போது வெளியாகியுள்ளது.
மட்டக்களப்பு விகாராதிபதி அம்பேபிட்டிய சுமண ரத்ன தேரர், கொழும்பிலிருந்து சென்ற மின்சார சபையின் அதிகாரியை தாக்கியதுடன், மிகவும் கேவலமான வார்த்தைகளையும் பிரயோகித்திருந்தார்.
குறித்த செய்தியை ஆதாரத்துடன் லங்காசிறி இணையத்தளம் முதன் முதலாக வெளியிட்டதையடுத்து, இலங்கையில் அனைத்து ஊடகங்களிலும் பிரசுரமாகின.
குறித்த தேரரின் அடாவடித்தனம் தொடர்பில் தற்போது இரண்டாவது காணொளியும் வெளியாகியுள்ளது.
பொலிஸ் உத்தியோகத்தர்களின் முன்னிலையில் இடம்பெற்ற இச்சம்பவம், பௌத்த பிக்குகளின் மத்தியிலும் சிங்கள மக்கள் மத்தியிலும் பாரிய அவமானத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சட்டவிரோத மின்சாரம்: பார்வையிடச் சென்ற அதிகாரியை தாக்கிய மட்டு.விகாராதிபதி
கொழும்பிலிருந்து வருகை தந்த மின்சார புலனாய்வு பிரிவின் உத்தியோகத்தர் மட்டக்களப்பு நகரிலுள்ள பௌத்த விகாரையில் மின்சார பாவனையை பார்வையிட சென்ற போது அங்குள்ள பிக்கு இவரை தாக்கியுள்ளார்.
இச்சம்பவம் கடந்த புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
பௌத்த விகாரையில் சட்ட விரோதமான முறையில் மின்சாரம் பாவிப்பது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள சென்றபோது விகாரைக்கு பொறுப்பான அம்பேபிட்டிய சுமண ரத்ன தேரரால் தாக்கப்பட்டதோடு, அவதூறான வார்த்தைகளையும் பிரயோகித்துள்ளார்.
இவர்களோடு சென்ற பொலிஸாருடன் சம்பவத்தினை பார்த்துக் கொண்டு இருந்ததாக தகவல் கிடைத்துள்ளது.
இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படுமா என மின்சார சபை வட்டாரங்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமின்றி, ஜனாதிபதி மகிந்தவையும் சுமண ரத்ன தேரர் ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
பிக்குவின் அடாவடித்தனத்தை அம்பலப்படுத்திய லங்காசிறி! முன்னிலைப்படுத்திய இலங்கை ஊடகங்கள்
மட்டக்களப்பில் பௌத்த பிக்கு ஒருவரின் அடாவடித்தனம் தொடர்பில் ஆதாரத்துடன் லங்காசிறி இணையத்தளம் நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.
கொழும்பிலிருந்து வருகை தந்த மின்சார புலனாய்வு பிரிவின் உத்தியோகத்தரை மட்டக்களப்பு விகாராதிபதி அம்பேபிட்டிய சுமண ரத்ன தேரர் தாக்கியமை தொடர்பான செய்தியை ஆதாரபூர்வமாக லங்காசிறி இணையத்தளம் நேற்று வெளியிட்டிருந்தது.
இன்று இலங்கையில் அனைத்து ஊடகங்களும் அச்செய்திக்கு முக்கியத்துவம் அளித்துள்ளன. அத்துடன் குறித்த காணொளியினை 24 மணித்தியாலத்திற்குள் YOUTUBE இல் பல ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszARaKXmu1.html

Geen opmerkingen:

Een reactie posten