[ ஞாயிற்றுக்கிழமை, 26 ஒக்ரோபர் 2014, 09:01.04 AM GMT ]
இது தொடர்பாக அவர் ஆளுங்கட்சியுடன் அதிருப்தியில் உள்ள முக்கியஸ்தர்களைத் தனிப்பட்ட ரீதியில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் நாளைய தினம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையும் எண்ணத்தில் இருந்த வசந்த சேனநாயக்கவை கடந்த வெள்ளிக்கிழமை சஜித் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.
அதன்போது வசந்த சேனநாயக்க ஐ.தே.க. வில் இணையவுள்ள தகவலை உறுதிப்படுத்திக் கொண்ட பின், அவ்வாறு கட்சி மாற வேண்டாம் என்று சஜித் கடுமையாக அறிவுரை கூறியுள்ளார்.
“ரணிலை நம்பி எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். அவர் நம்பிக்கைத் துரோகி. சொன்னதைச் செய்யமாட்டார். 2001ம் ஆண்டு அரசியல் மாற்றத்துக்குக் காரணமாக இருந்த எஸ்.பி.திசாநாயக்க மற்றும் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரை ஆட்சிக்கு வந்த பின் உதாசீனப்படுத்தி விட்டார். அவர்கள் அரசியல் அநாதைகளாக மீண்டும் சுதந்திரக் கட்சியில் சரணாகதி அடைய நேர்ந்தது.
உங்களுக்கும் அவர் என்னதான் வாக்குறுதிகள் அளித்தாலும் ஆட்சிக்கு வந்தால் அவற்றை மறந்துவிடுவார். நன்றாக தீர்மானித்து முடிவெடுங்கள். அரசியல் எதிர்காலத்தை நாசமாக்கிக் கொள்ளாதீர்கள்” என்று நீண்ட நேரம் சஜித் அறிவுரை கூறியுள்ளார்.
சஜித்தின் அறிவுரை காரணமாக நாளைய தினம் வசந்தவின் கட்சிதாவல் நடைபெறாது என்று நம்பகமான தகவல் வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.
கட்சி தாவும் தனது முடிவை அவர் தற்போது மீள்பரிசீலனை செய்து கொண்டிருப்பதாகவும் குறித்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என அவ்வூடகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszARaKXmuz.html
கிளிநொச்சியில் போர்க்குற்ற சாட்சியமளிப்பு படிவத்தை விநியோகம் செய்தவர் கைது
[ ஞாயிற்றுக்கிழமை, 26 ஒக்ரோபர் 2014, 09:11.29 AM GMT ]
கிளிநொச்சியில் போர்க்குற்ற சாட்சியமளிப்பு படிவத்தை பொதுமக்களுக்கு விநியோகம் செய்த குற்றச்சாட்டில் ஒருவரை பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையினால் நியமிக்கப்பட்ட போர்க்குற்ற விசாரணைக் குழுவுக்கு சாட்சியமளிப்பதற்கொனத் தயாரிக்கப்பட்ட படிவங்களை குறித்த நபர் மக்களுக்கு விநியோகித்துக் கொண்டிருந்தபோதே நேற்று கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபரிடமிருந்து போர்க்குற்ற விசாரணைக்காக சமர்ப்பிக்கப்படவிருந்த படிவங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபரை வவுனியாவுக்கு கொண்டுசென்று விசாரணைக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
http://www.tamilwin.com/show-RUmszARaKXmu0.html
Geen opmerkingen:
Een reactie posten