தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 2 oktober 2014

போயஸ் கார்டனில் இருந்து மூட்டை மூட்டையாய் பணம்: வழக்கின் முக்கிய திருப்பம்

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் பணியாற்றி வந்த ஜெயராமன் என்பவர் அளித்த வாக்குமூலம் தான் சொத்துக் குவிப்புவழக்கில் முக்கியத் திருப்பமாக அமைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில் ஜெயராமன் மற்றும் ராம் விஜயன் என்ற இரண்டு பணியாளர்கள் பணியாற்றியுள்ளனர்.
ஜெயராமன் தனி நீதிமன்றத்தில் அளித்துள்ள வாக்குமூலத்தில், ராம் விஜயன் அவ்வப்போது என்னிடம் சசிகலா கொடுத்ததாக பண மூட்டைகளை கொடுத்து வங்கிகளில் டெபாசிட் செய்ய கூறுவார்.
நானும் தொடர்ச்சியாக பல முறை அந்த பணத்தை ஜெயலலிதா, சசிகலா ஆகியோரது பெயர்களில் இருந்த நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளில் சேர்த்து விட்டு வருவேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்த வாக்குமூலத்தை வைத்து தான் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் எப்படியெல்லாம் கணக்கில் வராத பணத்தைக் கையாண்டனர், வங்கிக் கணக்குகளில் சேர்த்தனர் என்பது குறித்த முக்கிய ஆதாரத்தை அரசுத் தரப்பு வெளியிட்டுள்ளது.
1991ம் ஆண்டு ரூ. 2 கோடி மட்டுமே இருந்த ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ. 50 கோடிக்கும் மேலாக உயர்ந்தது இந்த ஆதாரத்தை மேலும் வலுவாக்கியுள்ளது.
மேலும், தனது வாக்குமூலத்தில் கடைசி வரை ஜெயராமன் உறுதியாக இருந்துள்ளார் என்றும் அவர் பிறழ் சாட்சியம் அளிக்கவில்லை என்பதால் ஜெயலலிதா தரப்புக்கு இது எதிராக போய் விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Geen opmerkingen:

Een reactie posten