தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 2 oktober 2014

இடம்பெயர்ந்த மக்களுக்கு 100 மில்லியன் ரூபாவை பகிர்ந்தளிக்க அரசாங்கம் தீர்மானம் (செய்தித் துளிகள்)!



நந்திக்கடலில் கரையொதுங்கும் மீன்கள்: அதிர்ச்சியில் மீனவர்கள்
[ வியாழக்கிழமை, 02 ஒக்ரோபர் 2014, 07:26.56 AM GMT ]
நந்திக்கடல் வடக்காறு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருவதாக அப்பிரதேச மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இன்று சுமார் 50 ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான மீன்கள் இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிலாப்பி, கெளிறு, மணல், மன்னா, கூறல் போன்ற மீன் வகைகளே இவ்வாறு இறந்த நிலையில் கரையொதுங்குவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு கரையொதுங்கி வரும் மீன்களை வட்டுவாகல் கிராமிய கடற்தொழில் மீன்பிடி கூட்டுறவு சங்கத்துடன் இணைந்து கறைத்துறைப்பற்று பிரதேச சபை மற்றும் மீனவர் கூட்டுறவு சங்கத்தினர் இணைந்து துப்பரவு செய்யும் முயற்சியில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszATWKVfu1.html
இடம்பெயர்ந்த மக்களுக்கு 100 மில்லியன் ரூபாவை பகிர்ந்தளிக்க அரசாங்கம் தீர்மானம் (செய்தித் துளிகள்)
[ வியாழக்கிழமை, 02 ஒக்ரோபர் 2014, 08:08.57 AM GMT ]
போர் நடைபெற்ற காலத்தில் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து முகாம்களில் இருந்து, மீள்குடியேற்றப்பட்ட வட பகுதி மக்களுக்கு 100 மில்லியன் ரூபா நிவாரண உதவியை பகிர்ந்தளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு மற்றும் புனர்வாழ்வு அதிகாரசபை இணைந்து இந்த நிவாரணத்தை வழங்க உள்ளன.
இதனடிப்படையில், கிளிநொச்சியில் எதிர்வரும் 12 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் வடபகுதி மக்களுக்கான இந்த நிதியுதவி வழங்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேவேளை இந்த வருடத்தின் இறுதிக்குள் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு மேலும் 72 மில்லியன் ரூபா பகிர்ந்தளிக்கப்பட உள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைப்பு குறிப்பிட்டுள்ளது. 
ஐ.தே.கட்சிக்குள் முரண்பாடுகள் 98 வீதம் முடிவுக்கு வந்து விட்டது- அகில விராஜ் காரியவசம்
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருந்து வந்த கருத்து முரண்பாடுகள் 98 வீதம் முடிவுக்கு வந்து விட்டதாக அந்த கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னோக்கிய பணத்திற்கு தடையேற்படுத்தும் நோக்கில் சிலர் இன்னும் பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள வானொலி ஒன்றில் நேற்றிரவு இடம்பெற்ற அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கட்சியின் வெற்றி பயணத்திற்கு பங்களிப்பு செய்த சகலரையும் என்றும் பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சஜின் வாஸ் நடத்தவிருந்த செய்தியாளர் சந்திப்பு ரத்து
ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பு திடீரென ரத்து செய்யபபட்டுள்ளது.
பிரிட்டனுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் கிறிஸ் நோனிஸ் மீது நியூயோர்க்கில் வைத்து தாக்குதல் நடத்தியதாக சஜின் வாஸ் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இன்று காலை 9.30 மணிக்கு வெளிவிவகார அமைச்சில் இந்த விசேட செய்தியாளர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் விளக்கம் அளிக்கும் நோக்கில் செய்தியாளர் சந்திப்பினை ஏற்பாடு செய்திருந்தார்.
எனினும் இறுதி நேரத்தில் மேலிடத்து உத்தரவிற்கு அமைய செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதற்கான காரணங்கள் அறிவிக்கப்படவில்லை.
இதேவேளை, சஜின் வாஸிற்கு எதிராக விசாரணை நடத்தி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு நோனிஸ் அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATWKVfu2.html

Geen opmerkingen:

Een reactie posten