தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 25 oktober 2014

புலம்பெயர் விடுதலைப் புலிகள் மீண்டும் நாடு திரும்பும் முயற்சியில்?

வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றிருந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மீ்ண்டும் நாடு திரும்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.
இராணுவத்தினருடனான இறுதி யுத்தத்தின் பின்னர் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் பலர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றிருந்தனர். இவர்களில் உயர்மட்ட உறுப்பினர்கள் சிலரும் உள்ளடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தற்போது வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மீண்டும் நாடு திரும்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சிறு சிறு குழுக்களாக அவர்கள் மீண்டும் நாடுதிரும்பும் சாத்தியம் காணப்படுவதாக புலனாய்வுப் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்தே அவர்கள் மீண்டும் நாடு திரும்ப முயற்சிப்பதாக தெரிய வந்துள்ளது. விடுதலைப் புலிகளின் நான்கு முக்கிய அமைப்புகளின் பங்களிப்புடன் இது தொடர்பான கலந்தாலோசனை ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.
நாடு திரும்பும் விடுதலைப் புலி உறுப்பினர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஊடுருவும் திட்டத்தையும் கொண்டுள்ளனர். அவர்களைக் கொண்டு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இது தொடர்பான தகவல்களை புலனாய்வுப் பிரிவினர் வெளியிட்டுள்ளதாகவும் சிங்கள இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
http://www.tamilwin.com/show-RUmszARZKXnx6.html

Geen opmerkingen:

Een reactie posten