தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 25 oktober 2014

தமிழக மீனவப்படகு உரிமையாளர்கள்- சுவாமி சந்திப்பு! படகுகளை மீட்டுத் தருமாறு கோரிக்கை!

வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படவில்லை: ஐ.தே.க (செய்தித் துளிகள்)
[ சனிக்கிழமை, 25 ஒக்ரோபர் 2014, 01:03.09 AM GMT ]
வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு எவ்வித நன்மைகளும் வழங்கப்படவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்கம் இம்முறை முழு அளவிலான போலி வரவு செலவுத் திட்டமொன்றை முன்வைத்துள்ளது.
அனைத்து விடயங்கள் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வரவு செலவுத் திட்டத்தை நோக்கும்போது தோன்றினாலும், இது எவ்வித அர்த்தமும் இல்லாத வரவு செலவுத் திட்டமொன்றாகும்.
அரசாங்க உத்தியோகத்தர்களின் சம்பளங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் பிரச்சாரம் செய்கின்றது. எனினும் மிகவும் சொற்ப அளவிலான சம்பளமே உயர்த்தப்பட்டள்ளது.
போலியானதும் கணித வித்தைகளைக் கொண்டதுமான ஓர் வரவு செலவுத் திட்டமாகும்.
மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவது பற்றியோ மக்களின் நலன்கள் பற்றியோ இந்த வரவு செலவுத் திட்டத்தில் கவனிக்கப்படவில்லை.
அரசாங்கம் மக்கள் மீது வரிச் சுமையை அதிகரிக்க முயற்சித்து வருகின்றது.
இந்த நடவடிக்கைகக்கு நாம் இடமளிக்கக் கூடாது என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டம் தொடர்பில் அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்க உத்தியோகத்தர்களின் சம்பளம் 924 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது: லால்காந்த
அரசாங்க உத்தியோகத்தர்களின் சம்பளங்கள் 924 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளதாக ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
அரச உத்தியோகத்தர்களின் சம்பளங்களை குறைந்தபட்சம் 10,000 ரூபாவினால் உயர்த்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
அரசாங்கம் உழைக்கும் மக்களை ஏமாற்றியுள்ளது..
இலக்க வித்தை ஒன்றின் மூலம் உழைக்கும் வர்க்கத்தினர் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
அரச உத்தியோகத்தர்களின் அடிப்படைச் சம்பளத்தை 10000 ரூபாவினால் உயர்த்தப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.
எனினும், அரசாங்கம் 2015ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்க உத்தியோகத்தர்களின் அடிப்படைச் சம்பளம் 924 ரூபாவினால் உயர்த்தப்பட உள்ளது.
924 ரூபா சம்பள உயர்வும் 2200 ரூபா கொடுப்பனவு அதிகரிப்பு உள்ளடங்களாக மொத்தமாக 3124 ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளது.
உழைக்கும் மக்களை ஏமாற்றும் வகையில் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தனியார்துறை ஊழியர்களின் சம்பளத்தை 375 ரூபாவினால் உயர்த்துமாரே ஜனாதிபதி கோரியுள்ளார்.
பெருந்தோட்ட மக்களின் சம்பள உயர்வு பற்றி எவ்வித கருத்து;களும் முன்வைக்கப்படவில்லை.
வரவு செலவுத் திட்டத்தின் சம்பள உயர்வு ஓர் இலக்க வித்தையாகும் என கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இந்தக் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARZKXnx1.html

மஹிந்தவின் தேர்தல் பட்ஜெட்: வாக்குறுதிகளை நம்பலாமா?
[ சனிக்கிழமை, 25 ஒக்ரோபர் 2014, 01:36.08 AM GMT ] [ பி.பி.சி ]
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் வரும் ஜனவரி மாதம் நடக்கவுள்ள சூழ்நிலையில், மகிந்த ராஜபக்ஷ தனது பத்தாவது வரவுசெலவுத் திட்டத்தை முன்வைத்துள்ளார்.
பொருளாதார ரீதியில் நலிவான நிலையில் உள்ள மக்களை இலக்கு வைத்து இந்த வரவுசெலவுத் திட்டத்தில் மகிந்த ராஜபக்ஷ வாக்குறுதிகளை அளித்துள்ளதாக பொருளாதார வல்லுநர் முத்துக்கிருஷ்ணன் சர்வானந்தா தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார சூழலுடன் ஒப்புநோக்குகின்ற போது, இம்முறை வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளை அரசாங்கத்தால் முழுமையாக நிறைவேற்ற முடியுமா என்பது சந்தேகமே என்றும் அவர் பிபிசிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எந்தவொரு சிறப்புத் திட்டங்களையும் அரசு அறிவிக்காமல் விட்டமையின் பின்னணியில் அரசியல் காரணங்களே இருப்பதாகவும் சர்வானந்தா தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszARZKXnx2.html
மஹிந்தவின் சிந்தனையில் சிக்கி சின்னாப்பின்னமாகும் மக்கள்: சஜித் பிரேமதாஸ
[ சனிக்கிழமை, 25 ஒக்ரோபர் 2014, 01:48.34 AM GMT ]
2015ம் ஆண்டுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு- செலவுத்திட்டமானது 'செலவு' இலக்கங்களை மாற்றும் ஜில்மாட் திட்டமாகும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித்தலைவரும்  நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
சகலருக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்று நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சரான ஜனாதிபதி யோசனைகளை முன்மொழிந்தாலும் அது மக்களுக்கு கிடைக்காது. இதன் மூலமாக மக்கள் சிக்கி சின்னாப்பின்னமாவது மட்டுமே மிச்சமாகும் என்றார்.
நிதியமைச்சரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ, 2015 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றியதன் பின்னர், எதிரணியை பார்த்து எப்படி பாங்கறியாதவனின் திட்டம் எப்படியென்று வினவினார்.
இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARZKXnx3.html

வடமராட்சியில் உருக்குலைந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு
[ சனிக்கிழமை, 25 ஒக்ரோபர் 2014, 02:27.31 AM GMT ]
வடமராட்சி முள்ளி பகுதியிலுள்ள பற்றைக்குள் இருந்து உருக்குலைந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த 20ம் திகதி காணாமற்போன வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான கலியுகமூர்த்தி சுகந்தி (வயது 36) என்பவரே நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து மேலும் தெரிய வருவது,
கடந்த 20ம் திகதி குறித்த பெண் தனது வீட்டிலிருந்து புறப்பட்டு பருத்தித்துறையிலுள்ள நண்பியின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
எனினும் மறுநாள் வரையில் அவர் வீடு திரும்பாததையடுத்து அப்பெண்ணின் கணவன் 21ம் திகதி பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் குறித்த பெண் நேற்று உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும் விறகு வெட்டுவதற்காகச் சென்ற சிலர் அங்கிருந்த பெண்ணின் சடலத்தைக் கண்டு நெல்லியடி பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து, அங்கு வந்த பொலிஸார் சடலத்தை மீட்டதுடன் விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszARZKXnx4.html
தமிழக மீனவப்படகு உரிமையாளர்கள்- சுவாமி சந்திப்பு! படகுகளை மீட்டுத் தருமாறு கோரிக்கை
[ சனிக்கிழமை, 25 ஒக்ரோபர் 2014, 02:54.04 AM GMT ]
தமிழக அப்பாவி மீனவர்களை விடுவிக்கும் நிதியத்தின் உறுப்பினர்கள் நேற்று ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியம் சுவாமியை சந்தித்துள்ளனர்.
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 79 படகுகளை விடுவிக்கும் முகமாகவே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது பாரதீய ஜனதாக்கட்சியின் தமிழக சிரேஸ்ட தலைவரான எச் ராஜாவும் மீனவர்களுடன் சென்றிருந்தார்.
சட்டவிரோதமாக இலங்கை கடலில் மீன்பிடித்ததாக குற்றம் சுமத்தி இந்த படகுகள் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் காங்கேசன்துறை, மன்னார் மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களில் பாரிய சேதங்களுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது படகுகளை விடுவித்து தருமாறு கோரி மீனவர்கள், சுவாமியிடம் மனு ஒன்றை கையளித்தனர்.
இதனையடுத்து குறித்த விடயத்தை இலங்கை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்து உதவுவதாக சுவாமி உறுதியளித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARZKXnx5.html

Geen opmerkingen:

Een reactie posten