தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 1 oktober 2014

வடக்கில் ஜனாதிபதி பங்கேற்கும் நிகழ்வுகள் கூட்டமைப்புக்கு அழைப்பு இல்லை!

யாழ். ஊடகவியலாளர் தயாபரனிடம் மூன்றரை மணிநேரம் விசாரணை!
யாழ்ப்பாண ஊடகவியலாளர், இரத்தினம் தயாபரன் இன்று காங்கேசன்துறையில் இயங்கிவரும் வடமாகாண விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவில் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டார். சுமார் மூன்றரை மணி நேரம் இந்த விசாரணை இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரு மாதங்களாக பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள், பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர், காவல்துறை விசாரணைகளை அவர் தொடர்ச்சியாக எதிர்கொண்டிருந்ததாக தெரியவருகிறது.

இந்தநிலையில் இன்று அவர் வடமாகாண விசேட குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. காலை பத்து மணிக்கு அவரிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பமாகி சுமார் பிற்பகல் ஒன்றரை தாண்டியும் அது நீடித்ததாகவும் கூறப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி அண்மையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம், ஓமந்தையில் கஞ்சா பொட்டலம் வைக்கப்பட்ட சம்பவம், ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிகள், கொழும்பு மற்றும் சர்வதேச ஊடக அமைப்புக்களுடனான தொடர்பாடல்கள், மனித உரிமை அமைப்புக்களுடனான செயற்பாடுகள், மற்றும் 16 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவம் என்பன தொடர்பாகவே விசாரணைகள் நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக தெரியவருகிறது.
01 Oct 2014
http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1412199538&archive=&start_from=&ucat=1&
வடக்கில் ஜனாதிபதி பங்கேற்கும் நிகழ்வுகள் கூட்டமைப்புக்கு அழைப்பு இல்லை!
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வரும் 12ம் திகதி வடக்கிற்குப் பயணம் செய்யவுள்ள நிலையில் அவருடைய நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கான அழைப்பு இன்னமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குக் கிடைக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். எதிர்வரும் 12, 13, 14 ஆகிய நாட்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வடக்கிற்கு பயணம் செய்யவுள்ளனர். இந்நிலையில் இந்தப் பயணத்தின் போது இடம்பெறவுள்ள நிகழ்வுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கலந்து கொள்ளுமா எனக் கேட்டபொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதியின் வடபகுதிப் பயணத்தின் போது கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் பல்வேறு நிகழ்வுகளில் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளார். இதேபோல் இம்மாகாணத்தின் மீளாய்வு தொடர்பான அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் கலந்து கொள்ளவுள்ளார். இந்நிலையில் ஜனாதிபதியின் நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இன்னமும் அழைப்புக் கிடைக்கவில்லை எனவும் அவ்வாறான சூழலில் தமது நிலைப்பாடு தொடர்பாக ஓரிரு நாட்களில் வடமாகாண முதலமைச்சரின் ஊடாக தெரியப்படுத்தப்படும் எனவும் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
01 Oct 2014

http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1412199704&archive=&start_from=&ucat=1&

Geen opmerkingen:

Een reactie posten