இதையடுத்தே நீதிபதி ரத்னகலா அரசு வழக்கறிஞர் நியமிக்கட்டும் என்று கூறி அக்டோபர் 6ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயலலிதா தரப்பு உடனடியாக உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் தேசாயை அணுகியது. அவரிடம், இந்த வழக்கைப் பொறுத்தவரை அரசு வழக்கறிஞர் இல்லாமலேயே கூட விசாரணை நடத்தலாம் என்பதை சட்ட விவரத்துடன் எடுத்துக் கூறி உடனடியாக இதை விசாரிக்க வகை செய்யுமாறு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து தலைமை நீதிபதி டி.எச். வகேலாவைத் தொடர்பு கொண்டார் பதிவாளர் ஜெனரல். அவரது அறிவுறுத்தலின் பேரில் இந்த மனுக்கள் புதன்கிழமையன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அரசு வழக்கறிஞர் இல்லாமலேயே விசாரணை நடைபெறும் என்று கூறப்பட்டிருந்தது.
அவசரம் அவசரமாக பவானி சிங் நியமனம்:
ஆனால் இரவில் மீண்டும் திடீர் திருப்பம் ஏற்பட்டது. பவானி சிங்கை இந்த வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞராக நியமித்து கர்நாடக அரசு அவசரம் அவசரமாக உத்தரவைப் பிறப்பித்தது. பவானி சிங்குக்கும் அதுதொடர்பான உத்தரவு நேரில் வழங்கப்பட்டது. இதனால் மீண்டும் பரபரப்புத் தொற்றிக் கொண்டுள்ளது. இன்றைய ஜெயலலிதா மனுக்கள் மீதான விவாதத்தின்போது பவானி சிங் அரசு சிறப்பு வழக்கறிஞராக ஆஜராகவுள்ளார். இவர் வந்திருப்பதால் பிணை பெறுவதில் ஏதாவது சிக்கல் நேருமோ என்ற குழப்பம் ஜெயலலிதா தரப்புக்கு வந்துள்ளது. ஏற்கனவே ஜெயலலிதாவுக்கு பிணை; வழங்குவதை தான் எதிர்ப்பேன் என்று பவானி சிங் கூறியுள்ளார் என்பது நினைவிருக்கலாம். பவானி சிங் தொடர்பான இந்த திடீர் திருப்பத்தால் இன்று உயர்நீதிமன்றத்தில் என்ன நடக்கப் போகிறதோ என்ற கவலையில் அதிமுகவினர் உள்ளனர்.
இதன் காரணமாகத்தான் இன்று கொடுக்க இருந்த மனுவை வாபஸ் வாங்கினார்களோ தெரியவில்லை. மேலிடத்தில் யாரோ ஜெயலலிதாவுக்கு எதிராக கடுமையாக விளையாடுகிறார்கள் என்பது தற்போது நன்றாகத் தெரிகிறது.
http://www.athirvu.com/newsdetail/1119.html
Geen opmerkingen:
Een reactie posten