தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 6 oktober 2014

தனது தாயாரின் நிலை கண்டு மகள் தற்கொலை முயற்சி!

ஊவாவில் மக்கள் விடுதலை முன்னனி உறுப்பினர்கள் சத்தியபிரமாணம்: நாளை ஐ.தே.க
[ திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2014, 10:12.04 AM GMT ]
ஊவா மாகாணத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் இருவரும் இன்று ஊவா மாகாண ஆளுநர் நந்த மெத்திவ் முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்து கொண்டனர்.
மக்கள் விடுதலை முன்னணி சார்பில் பதுளை மாவட்டத்தில் 14,161 விருப்பு வாக்குகளைப் பெற்று தெரிவு செய்யப்பட்ட சமந்த வித்தியாரத்ன மற்றும் மொனராகலை மாவட்டத்தில் 5785 விருப்பு வாக்குகளைப் பெற்று தெரிவு செய்யப்பட்ட ஆர்.எம்.ஜயவர்த்தன ஆகியோரே சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
இதேவேளை, ஊவா தேர்தலில் வெற்றிபெற்ற ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் நாளை சத்தியபிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.
ஊவா மாகாண சபையின் முதலாவது அமர்வு எதிர்வரும் 9ம் திகதி முதலமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszATaKWmoy.html
தனது தாயாரின் நிலை கண்டு மகள் தற்கொலை முயற்சி
[ திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2014, 10:15.16 AM GMT ]
யாழ். ஆணைக் கோட்டை சோமசுந்தரம் வீதியை சேர்ந்த பி. விமலதேவி (வயது 46) 5 பிள்ளைகளின் தாய் இன்று தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த சமயம் பிள்ளைகளால் காப்பாற்றப்பட்டுள்ளார்.
8 பிள்ளைகளை பெற்ற அவரது தாய் மகளுடன் இருந்து பிரிந்து சென்றும், ஏனைய பிள்ளைகளை கவனிக்காமல் விட வீதியில் தனது தாய் அலைந்து திரிவதை கண்டு துக்கம் தாங்க முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.
எனினும் பிள்ளைகளின் முயற்சியால் காப்பாற்றப்பட்டு ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று காலை 6.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.  இச்சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszATaKWmoz.html

Geen opmerkingen:

Een reactie posten